மேலும் அறிய

கொடைக்கானல் ரோப் கார் சேவை: வனப்பகுதிக்குள் ஆய்வு செய்ய மெட்ரோ திட்டம்! சுற்றுலாப் பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்?

கொடைக்கானல் - வட்டக்கானல் பகுதியில் இருந்து வெள்ளகெவி வழியாக, பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை வரை 8.3 கி.மீ., தொலைவுக்கு ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது.

கொடைக்கானல் வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்காக வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவிலேயே மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

கொடைக்கானல் ரோப் கார் சேவை: வனப்பகுதிக்குள் ஆய்வு செய்ய மெட்ரோ திட்டம்! சுற்றுலாப் பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்?

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம்.  கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. 

கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும். ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், கடந்த 2022-ல் பழனி - கொடைக்கானல் வரை 12 கி.மீ. தொலைவுக்கு ரோப் கார் திட்டம், மாநில அரசு பங்களிப்புடன் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், இத்திட்டத்துக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணியில் ஆஸ்திரேலிய வல்லுநர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன் பிறகு, தற்போது வரை இத்திட்டத்தில் முன்னேற்றம் இல்லை.

கொடைக்கானல் ரோப் கார் சேவை: வனப்பகுதிக்குள் ஆய்வு செய்ய மெட்ரோ திட்டம்! சுற்றுலாப் பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்?

இதனால், சுற்றுலா பயணிகள், கொடைக்கானல் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். சுற்றுலாத்துறை மூலம் கொடைக்கானல் அருகேயுள்ள வட்டக்கானல் பகுதியில் இருந்து வெள்ளகெவி வழியாக, பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை வரை 8.3 கி.மீ., தொலைவுக்கு ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. இதற்காக, கடந்த ஜன. 9-ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர், வட்டக்கானல் பகுதியில் முதல்கட்ட ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, ரோப் கார் அமைய உள்ள பகுதி வனப்பகுதி வழியாக செல்வதால், 2-ம் கட்டமாக வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரையுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக வனத்துறையிடம் அனுமதி கோர சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ரோப் கார் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதிகள் காப்புக் காட்டுக்குள் வருகிறது. எனவே, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எங்களிடம் அனுமதி பெறாமல் வனப் பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்த முடியாது. அவர்கள் அனுமதி கோரினால், வனத்துறை ஒத்துழைப்புடன் வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை, என்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!
திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Embed widget