மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். 




அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!


சுற்றுலா செல்வதற்கு அதிகமானோர் விரும்பிய இடங்களில் கொடைக்கானல் மறுக்க முடியாத ஒரு இடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க நிலையில், கொடைக்கானல் முழுவதும் மலை தொடர்கள் அதிகம் உள்ள இடங்கள் என்பதால் ஒவ்வொரு கிராம மற்றும் நகர் புற இடங்களுக்கு குறிப்பிட்ட இடைவெளிகள் இருப்பது அதிகம். அதிலும் கொடைக்கானல் உள்காடு கிராமபுற பகுதிகளுக்கு செல்வது போக்குவரத்து உட்பட கால நிலை மாற்றத்தினாலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் அதே நிலையில்தான் கிராம புற பகுதிகளில் மருத்துவம் போன்ற முக்கிய தேவைக்காக பொதுமக்கள் கிராம புற பகுதிகளை விட்டு நகர் புற பகுதிகளுக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் போலி மருத்துவர்கள் அதிகளவில் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்த நிலையில் போலி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் அவ்வப்போது நடைபெற்றுதான் வருகிறது.


கொடைக்கானல் சுற்று வட்டார பகுதிகளில் இந்த சூழலில்தான் கொடைக்கானல் அருகில் உள்ள கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (24). இவருக்கு 1 ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் பிரியதர்ஷினிக்கு 20 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர் வீடு திரும்பினார். சில நாட்களிலேயே பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு மருந்து மாத்திரைகளை பிரின்ஸ் வழங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும்வயிற்று வலி ஏற்படவே பிரின்ஸ்சிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார்.


Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!




அவர் வலி குறைவதற்காக அதிக வீரியம் கொண்ட ஊசியை அவருக்கு செலுத்தினார். சற்று நேரத்தில் பிரியதர்ஷினிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தபோது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொடைக்கனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிரியதர்ஷினி உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரின்ஸ் முறையான மருத்துவம் படிக்காமல் தனது வீட்டிலேயே கிளீனிக் போல நடத்தி அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரை கொடுத்து வைத்தியம் பார்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது பிரின்ஸ் சிகிச்சையால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் மற்றும் மருத்துவ துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.