கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் சுற்றுலா தலத்தில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக அனுமதி ரத்து என வனத்துறை இன்று அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது . இங்கு சுற்றுலாப் பணிகள் அதிகம் விரும்பும் சுற்றுலா பகுதியான பேரிஜம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு செல்வதற்கு வனத்துறை இடம் சிறப்பு அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும். தற்போது பேரிஜம் ஏரிக்கு யானைகளின் நடமாட்டம் இருந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் இன்று அறிவித்துள்ளனர் .
தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது இந்த சூழலில் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறை தடை விதித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் .மேலும் யானையை வன பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வேடசந்தூர் அருகே நள்ளிரவில் வெவ்வேறு இடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு துரைசாமி நாடார் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு தூங்கிவிட்டார்.
நள்ளிரவில் அங்கு வந்த மருமகன் அவர்கள் அவரது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு வெளியே வந்த கார்த்தி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். அதேபோல் பழைய தபால் அலுவலக தெருவை சேர்ந்த பன் வியாபாரி முருகன் என்பவருடைய இருசக்கர வாகனமும் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
ஒரே இரவில் வெவ்வேறு இடங்களில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் எரியோடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்