வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்தநாள் விழா மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் 293 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் போடி நகரம் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் அரண்மனை வளாகம் முன்பு அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு போடி சட்டமன்ற அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலுநாச்சியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஓபிஎஸ் உடன் இருந்து ஜேசிடி பிரபாகரன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அண்ணன் ஜேசிபி பிரபாகரன் எங்களை விட்டு நீண்ட தூரம் சென்று விட்டார். அவர் எங்களை விட்டு விலகி சென்று பல மாதங்கள் காலங்களாகிவிட்டது. ஆனாலும் , எங்களுடன் தொடர்பில் உள்ளார் என்று கூறினார் . தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவிற்கு மூன்று சீட்டுகள் ஒதுக்கப்பட்டதாக பற்றி கேள்வி எழுந்ததற்கு, தவறான செய்தி அதை யாரும் நம்ப வேண்டாம். அது வதந்தி என்றும் கூறினார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு வாய்ப்பில்லை என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பது சாத்தியமா? என்பது குறிப்பு கேட்டதற்கு, சாத்தியமாக வேண்டும். சாத்தியப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமே அதற்காகத்தான் இந்த போராட்டம் என்று மக்களுடைய குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார். அதிமுக ஒருங்கிணை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையின் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டார். அது பற்றி உங்கள் கருத்து என்பது என்ன? என்று கேட்டதற்கு , அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தது நான் தான் என்று கூறினார் . மீண்டும் தேசியஜனநாயக கூட்டணியில் அதிமுக ஒருங்கிணைய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பியதற்கு நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஆகிவிட்டது. நாங்கள் அமித்ஷாவிடம் சென்று தமிழகத்தினுடைய அரசியல் களம் நிலவரங்களை தெரிவித்து வந்ததாக, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கிய பொழுது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்பதன் அடிப்படையில் அதன் சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டது.
ஆனால் தற்போது அவைகள் மீறிவிட்டது, மீண்டும் எம்ஜிஆர் உடைய இயக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி தற்போது வரை நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடி வருகிறோம். கழக சட்ட விதிகளை கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதில் முழு மூச்சாக இயங்கி வருகிறோம், கழகத்தின் தொண்டர்கள் தங்கள் வழங்கி தேர்தலில் வாக்களித்து தேர்தலில் நடைமுறையில் விதிமுறைகள் படி பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், அந்த சட்ட விதிகளை மீறி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றத்தில் வழக்கத்துடன் எடுக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது . உச்ச நீதிமன்றம் வரை நாங்கள் சென்று இதற்கான போராட்டங்களை கையில் எடுத்து இரட்டை இலையையும் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். இதுகுறித்து சில வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்புகளையும் வழங்கி உள்ளது. விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்பது கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.