பெரியகுளத்தில் உள்ள அறம்வளா்த்த நாயகி உடனுறை ராஜேந்திரசோழீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாரல் மலையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ள அறம்வளா்த்தநாயகி உடனுறை ராஜேந்திர சோழீஸ்வரா் கோயிலில் உள்ள பாலசுப்பிரமணியா் சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மாலை உற்சவா் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும்,சுவாமிநகா் வலமும் நடைபெற்றது.
இதில் திருவள்ளுவா்சிலை, பெருமாள் கோயில், தெற்கு அக்ரஹாரம், சங்குஊதும் இடம் பகுதியில் ஆனைமுகம், பானுமுகன், சிங்கமுகம், மகாசூரன் ஆகிய முகங்களைக் கொண்ட சூரனை முருகப்பெருமாள் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாலையில் இருபுறங்களும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சாரல் மலையிலும் நின்று அரோகரா சரண கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின் முருகப்பெருமாள் சூரனை சம்ஹாரம் செய்தபின் வேலுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாரல் மழையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அன்னப்பாவாடை சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 முதல் 7 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கந்தசஷ்டி முன்னிட்டு அருள்மிகு விருப்பாட்சி ஆறுமுக நாயனார் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தேனி அருகே கோடங்கிபட்டி தீர்த்த தொட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு விருப்பாட்சி ஆறுமுக நாயனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், பன்னீர் ,சந்தனம் ,குங்குமம் ,இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக விஷயங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பஞ்ச கற்பூர தீபாரணைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் கம்பத்தில் உள்ள பிரிசித்தி பெற்ற கோயிலான கம்பராயபெருமாள் கோயில், சுருளி வேலப்பர் கோயில் , சுருளி அருவி செல்லும் வழியில் உள்ள முருகன் கோயில், காமயகவுண்டன்பட்டியில் உள்ள சண்முக நாதர் கோயில் உள்ளிட்ட தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் சூர சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தரிசனத்தில் பக்தர்கள் அரோகரா கோசங்கள் எழுப்பி பரவசமுடன் சாமி தரிசனம் செய்தனர்.