சென்னை மயிலாப்பூரில் கடந்த வாரம் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் பெரியார் அறிவுலகத்தில் காஞ்சி மகா பெரியவர் புத்தகத்தை அடுக்கி வைக்க வேண்டும். அகல் விளக்கு பதிப்பக நூல்கள் இருந்த இடத்தில் மகா பெரியவர் புத்தகம் இருந்தால் தான் பாவம் தீரும் எனவும் கூறியிருந்தார்.
சு.வெங்கடேசன் விமர்சனம்
இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை நீதியரசர்களின் வேலை என கூறியிருந்தார். அதாவது அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: "பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார். நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை.
நீதிபதி பதிலடி
சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்" என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் நூலகப் புத்தகக் கொள்முதல் தொடர்பான வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சு.வெங்கடேசனின் விமர்சனத்திற்கு நேரடியாகவே நீதிபதி பதிலடி கொடுத்தார்.
ஆடம்பரமாக இருக்கிறார்
அதாவது நகைச்சுவையாக நான் தெரிவித்த விஷயத்திற்கு சு.வெங்கடேசன் எனது பணிகளை எப்படி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மதுரை ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது உயர் ரக காரில், ஆடம்பர உடையில் ஒருவர் இறங்கினார். யாரோ என நினைத்தபோது சு.வெங்கடேசன் உயர் ரக காரில் ஆடம்பர உடையில் வந்து இறங்கினார். ரயிலில் சு.வெங்கடேசன் முதல் வகுப்புக்கு சென்றார். நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான சு.வெங்கடேசன் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார் நான் நினைத்துக் கொண்டேன் என்று சு.வெங்கடேசனை கடுமையாக போட்டு தாக்கியுள்ளார்.
