மேலும் அறிய

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட தொண்டி... தொல்லியல் ஆய்வாளர் தகவல் !

சிலப்பதிகாரம், பாண்டிக்கோவை, நந்திக்கலம்பகம், யாப்பருங்கலக்காரிகை உரை ஆகியவற்றிலும் தொண்டி குறிப்பிடப்படுகிறது. 

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட தொண்டி தொல்லியல் ஆய்வாளர் தகவல்.

படியெடுக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்தார்

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே, தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊராக தொண்டி திகழ்வதாக தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு தெரிவித்தார். திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொல்லியல் மரபு மன்ற மாணவர்கள், அகழாய்வு, கல்வெட்டை அறிந்துகொள்ள, தலைமையாசிரியர் செல்வராஜ் வழிகாட்டலில், களப்பயணமாக தொண்டிக்கு வந்தனர். இவ்வூர் சிவன், திருமால், தொண்டியம்மன் கோயில்கள், பழமையான பள்ளிவாசல், அகழாய்வு நடந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். கோயில் கல்வெட்டுகளை மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு மாணவர்களுக்கு படித்துக் காட்டி அதை படியெடுக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்தார். தொண்டி பற்றி அவர் கூறியதாவது, 

இலக்கியச் சான்றுகள் அதிகம் உள்ள ஊராக தொண்டி விளங்குகிறது

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலக்கியச் சான்றுகள் அதிகம் உள்ள ஊராக தொண்டி விளங்குகிறது. 2200 ஆண்டு பழமையான கீழவளவு தமிழிக் கல்வெட்டு,  தொண்டியைச் சேர்ந்த இலவோன் என்பவரைக் குறிப்பிடுகிறது. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தொண்டி, கொண்டல் காற்று, கானல், தில்லைச்செடி, நெய்தல் மலர், நெல்வயல், வெண்ணெல் ஆகிய சூழலைக் கொண்டு ராமநாதபுர மாவட்ட தொண்டி தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், பாண்டிக்கோவை, நந்திக்கலம்பகம், யாப்பருங்கலக்காரிகை உரை ஆகியவற்றிலும் தொண்டி குறிப்பிடப்படுகிறது. 

பவித்திரமாணிக்கப்பட்டினம்

சங்க காலம் முதல் துறைமுகப் பட்டினமாக இருந்த தொண்டியில் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் போன்ற ஜாவா, இந்தோனேசியா பொருள்கள் இறக்குமதியானதை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. இவை இங்கிருந்து மதுரை சென்றுள்ளன. சிதம்பரேஸ்வரர், உந்திபூத்தப் பெருமாள், நம்புதாழை நம்பு ஈஸ்வரர் ஆகிய கோயில்களிலும், கைக்களான்குளத்தின் நடுவிலும் பழமையான பாண்டியர் கல்வெட்டுகள் உள்ளன. தூய்மையான மாணிக்கக் கற்களுக்குப் பெயர்பெற்ற இலங்கையில் இருந்து வாங்கப்பட்டு அவை விற்கப்பட்ட பேட்டைகளாக தொண்டி, பெரியபட்டினம், காயல்பட்டினம் விளங்கியுள்ளன. இதனால் இவ்வூர்கள் பவித்திரமாணிக்கப்பட்டினம் எனப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். ஆசிரியர்கள் கலையரசி, தனலட்சுமி, ரவி, தனகுருபாலன் மாணவர்கள் 25 பேர் களப்பயணமாக வந்திருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
காரில் கொண்டுவரப்பட்ட 10 கோடி மதிப்பிலான நகைகள்.. பறக்கும் படை கண்ணில் சிக்கியது எப்படி !
காரில் கொண்டுவரப்பட்ட 10 கோடி மதிப்பிலான நகைகள்.. பறக்கும் படை கண்ணில் சிக்கியது எப்படி !
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
தொகுதி மறுவரையறை மசோதா சர்ச்சை: தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்பு என சு. வெங்கடேசன் விமர்சனம்
தொகுதி மறுவரையறை மசோதா சர்ச்சை: தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்பு என சு. வெங்கடேசன் விமர்சனம்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Kamal Haasan:
Kamal Haasan: "திமுகவை திட்ட மாட்டேன்..." கமல் சொன்ன காரணம்! வியப்பாக பார்த்த தொண்டர்கள்
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Embed widget