திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 166 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34729-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 82 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 33259-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 654 இருக்கிறது. இந்நிலையில் 816 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேனி , தென்காசி , நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விசாரித்தோம்.
தேனி மாவட்டத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46726 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 264 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை44014 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 524 இருக்கிறது. இந்நிலையில் 2188 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் 828 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56650-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 539 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 52168-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 441 இருக்கிறது. இந்நிலையில் 4041 கொரோனா பாதிப்பால் நெல்லை சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் இன்று 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 119 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29127-ஆக உயர்ந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27620-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தென்காசிமாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 487இருக்கிறது. இந்நிலையில் 1020 கொரோனா பாதிப்பால் தென்காசி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 351 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61268-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 355 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 58660-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளார். ஏதும் இல்லை என்பது ஆறுதல் . இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 428 இருக்கிறது. இந்நிலையில் 2180 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்