மதுரை தெற்குவாசல் தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் மார்த்தாண்டன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேல் மாடியில் நல்வாசனை ஏ.ஜி சபை எனும் பெயரில் கிறிஸ்தவ மத வழிபாட்டில் பொதுமக்கள் கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வர்.






இந்நிலையில் நேற்று கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டில் ஈடுபட்ட போது அங்கு வந்த இந்து முன்னனி மாவட்ட தலைவர் அரசப்பன், பாஜக ஓபிசி பிரிவின் மாநில செயலாளர் ராஜகண்ணன், மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன், மேலும் பாஜகவைச் சேர்ந்த சுபா நாகலு, ஆதிசேஷன் ஆகியோர் சபை என்ற பெயரில் அத்துமீறி மதமாற்றம் செய்வதாக கூறி வீட்டு உரிமையாளரை மிரட்டியதோடு, மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பிரவீன் ராஜ்குமார் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.





தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரைத்துறை காவல்துறையினர் பிரச்னையில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து முன்னனியை சேர்ந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சை மாணவி மரணம் - 20 பேரிடம் மூன்றரை மணி நேரம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை