இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். 

Continues below advertisement

நாடெங்கும் கோடிக்கணக்கான பயணிகள் ஒவ்வொரு நாளும் பயணிக்கின்றனர். இத்தகைய மக்கள் சேர்க்கையை நேர்த்தியாக நிர்வகிக்க இந்திய ரயில்வே ஒரு துல்லியமான நேர கட்டுப்பாட்டு அமைப்பை (Railway Time Management System) பின்பற்றுகிறது. “ரயில்வே நேரம்” என்பது சாதாரணமாக தோன்றினாலும், அது ஒரு அதிக சிக்கலான திட்டமிடும் மற்றும் கணிக்கப்படும் அமைப்பு ஆகும்.

Continues below advertisement

ரயில்வே நேரம் என்பது நாட்பட்ட, திட்டமிட்ட ரயில்வே இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு அமைதி மற்றும் ஒழுங்கு முறையாகும். இது ஒவ்வொரு ரயிலின் தொடக்க நேரம், இடைநிலையங்கள், முடிவு நேரம் போன்றவற்றை குறிக்கிறது.பயணிகள் மற்றும் சரக்கு சேவைகள் இரண்டும் துல்லியமாக இயங்க நேர கட்டுப்பாடுகள் முக்கியமானவை. ஒவ்வொரு வருடமும் புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிடப்படுகிறது. (IRCTC, NTES மூலம் காணலாம்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ரயில் முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு இறுதி அட்டவணை (Reservation Chart Preparation) வெளியிடும் நடைமுறை தமிழ்நாடு, கேரளாவை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயில் அமலுக்கு வந்தது.ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டு வந்ததால், கடைசி நேரத்தில் முன்பதிவு உறுதியாகாத பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே, இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரத்திற்கு முன்பே இறுதி அட்டவணை வெளியிட வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார். அதில், அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை, முந்தைய நாள் இரவு 9 மணிக்கு தயாரிக்கப்பட வேண்டும் என்றும் மதியம் 2 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அது அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களுக்கு தற்போது 8 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிடப்படுகிறது.