காரைக்குடி அருகே வி.சி.க., மாவட்ட நிர்வாகி தாக்கியதாக கையில் காயத்துடன் நாடகமாடிய பெண் எஸ்ஐ பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காவல்நிலையத்திற்கு சென்ற வி.சி.க., நிர்வாகிகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் (Sub Inspector) எஸ்.ஐ யாக பணியாற்றி வருபவர் பிரணிதா. கடந்த 5-ம் தேதி இரவு காவல் நிலையத்தில் கோயில் நிலத்தில் கட்டுமானம் தொடர்பாக சர்ச்சைக்குறிய புகார் மனு தொடர்பாக விசாரணைக்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் மற்றும் சிலர் வந்திருந்தனர். பெண் எஸ்.ஐயிடம் புகார் மனு தொடர்பாக கேட்டபோது, நான் தற்போது இந்த மனுவை விசாரணை செய்ய முடியாது. உயர் அதிகாரிகள் விசாரிப்பார்கள், நான் வேறு காவல் நிலையத்திற்கு பணியிடை மாறுதல் செய்யப்படுள்ளேன். என்று கூறிய நிலையில் எஸ்.ஐ யிடம் விசிக மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் உள்ளிட்டோர் தகராறு செய்தாக கூறப்பட்டது.
பெண் எஸ்.ஐ மீது தாக்குதலா உண்மை என்ன?
மேலும் பெண் எஸ்.ஐ என்று பாராமல் ஆபாசமாக பேசி இதற்கு காக்கிச் சட்டையை கழட்டி விடுவேன் என மிரட்டல் விடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டது. தகராறு செய்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெண் எஸ்.ஐ பிரணிதா காயமடைந்து மயங்கி காவல்நிலையத்தில் கீழே விழுந்ததாகவும், உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் மீட்டு பெண் எஸ்.ஐ-யை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தாகவும் சொல்லப்பட்டது. தொடர்ந்து காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெண் எஸ்.ஐ பிரணிதா சிகிச்சை பெற்றார். ஆனால் பெண் எஸ்.ஐ பிரணிதா கூறிய அனைத்தும் தவறனான தகவல் என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
சப் இன்ஸ்பெக்டர் பிரணிதா பணியிடை நீக்கம்
இதையடுத்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் தவறானது என்று சிவகங்கை மாவட்ட காவல்துறை விளக்கமளித்தது. காவல் நிலையத்திலிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியதில், பிரணிதா கூறியது பொய் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர் பிரணிதாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”தேவையில்லாம பேசாதீங்க” இபிஎஸ் vs செங்கோட்டையன் - ஆக்ரோஷமான செல்லூர் ராஜூ
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - “உட்காரும் இடத்தை குறிவைத்து அடிக்கிறார்கள் ஐயா” - கைதானவர்கள் நீதிபதியிடம் கதறல்