விழாக் காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் வடகிழக்கு பருவ மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்து சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.2,000-க்கு விற்பனையாகிறது. தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளன.


Officers Promotion and Transfer : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உட்பட 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அதிரடி..


இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை, முல்லை, ஜாதிப் பூ, சம்பங்கி, கனகாம்பரம், செண்டு பூ உள்பட பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, சீலையம்பட்டி, கம்பம் ஆகிய இடங்களில் பூ மார்க்கெட் உள்ளது.


Special Buses : தொடர் விடுமுறை...வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள்... முழு விவரம்..


Chennai Book Fair : 6-ஆம் தேதி தொடங்கும் 46-வது புத்தகக் கண்காட்சி; ஆனால், இந்தமுறை இந்த அரங்கம் தனி ஸ்பெஷல்!


ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மல்லிகைப்பூவின் வரத்து குறைவாக இருக்கும். ஆனால் ஜாதிப்பூ அதிக அளவில் வரத்தாகும். மேலும் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் செடிகளில் மொட்டுகளாக இருக்கும்போதே பூக்கள் கருகிவிடுகின்றன. இதனால் மல்லிகைப்பூவின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,000-க்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.




திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் விற்பனைக்கு வரும் பூக்களின் வரத்து, தேவையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைபூ கிலோ ரூ.1,000 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.


Vijayakanth: புத்தாண்டு வாழ்த்துச்சொல்ல வந்த விஜயகாந்த்.. கண்கலங்கி கதறி அழுத தேமுதிக தொண்டர்கள்...!


இந்நிலையில் புத்தாண்டை நாளில் மல்லிகைப்பூவின் விலை  அதிகரித்து கிலோ ரூ.1,700 முதல் ரூ.2 ஆயிரம் வரையில் விற்பனை ஆனது. அதேபோல் ரூ.900-க்கு விற்பனை ஆன முல்லைப்பூ விலை அதிகரித்து கிலோ ரூ.1,500 வரையில் விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட்டில் ஜாதிப்பூ கிலோ ரூ.1,500, கனகாம்பரம் ரூ.600, செவ்வந்தி, ரூ.80, காக்கரட்டான் ரூ.500, சம்பங்கி ரூ.100-க்கு நேற்று விற்பனை ஆனது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண