தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலையை வைப்பது தொடர்பாக அனுமதி கோரிய வழக்கு.
விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் அம்மச்சியாபுரம் பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலையை வைப்பது தொடர்பாக அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவிடுமாறு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ”அமைச்சியாபுரம் பகுதியில் உள்ள அனைவரும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினை சேர்ந்தவர்கள். ஆகவே எவ்விதமான சாதிய பிரச்சனைகளும் எழாது. அம்மச்சியாபுரம் கிராமத்தில் இமானுவேல் சேகரனின் சிலையினை வைக்க அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மனு அளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 10ஆம் தேதி வெண்கல சிலை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைதி கூட்டத்தில் முறையான அனுமதி பெறும் வரை சிலையை தகரம் அமைத்து மூடிவைக்கும் படி முடிவு எடுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில் , "சிலையை நிறுவுவதற்கு முன்பாக அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் மனு கொடுத்து 12 நாட்களிலேயே அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் இப்பகுதியில் சாதிய மோதல்கள் ஏற்பட்டுள்ளன சிலை வைக்க முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம். சிறந்த நபர்களின் சிலையை இதுபோல முறையான அனுமதி இன்றி வைப்பது ஏற்கத்தக்கதல்ல. மனுதாரரின் மனு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முன்பாக நிலுவையில் உள்ளது. சிலை வைக்க அனுமதி அளிக்க பல நடைமுறைகள் உள்ளன. ஆகவே முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை நவம்பர் 19ஆம் தேதிக்குள் அகற்றி, பாதுகாப்பாக வைக்கவும், தமிழக முதல்வர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றபின் சிலையை வைக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.