மிஸ்டர் அண்ணாமலை முகலாயர்களால் பிரிட்டிஷ்காரர்கள் கிறிஸ்தவ அமைப்புகளால் செய்ய முடியாததை திராவிட அரசியல் செய்து காட்டியது. - துரை வைகோ ஆவேசம்

 

பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாள் விழா மாநாடு மதுரை வளையங்குலம் பகுதியில் நடைபெற்றது. இதில் மதிமுக முதன்மை நிலை செயலாளர் துரை வைகோ மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினர்.

 

சனாதனத்தை வேறோடு அறுக்க வேண்டும்:


 

அப்போது பேசிய துரை வைகோ குறிப்பிடுகையில், ”சனாதன கலாச்சாரம் குலக்கல்வி திட்டத்தை ஊக்குவிக்கிறது. சனாதன தர்மம் பெண் விடுதலைக்கு எதிரானது. குழந்தை திருமணத்தை வற்புறுத்தியது. பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்றது. மானத்தை காக்க மேலாடை அணிய கூடாது. இதைத்தான் பெரியார், அண்ணா மற்றும் 100 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் எதிர்க்கிறது.

 

மிஸ்டர் அண்ணாமலை முகலாயர்களால் பிரிட்டிஷ்காரர்கள் கிறிஸ்தவ அமைப்புகளால் செய்ய முடியாததை திராவிட அரசியல் செய்து காட்டியது. 50 ஆண்டுகளுக்கு முன்பாக சனாதனத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது. அதற்கு காரணம் அம்பேத்கரும், அண்ணாவும், பெரியாரும் தான். சனாதனத்தை வேறோடு அறுப்பது அனைவரின் கடமை. இரண்டு பிறவியில் கொடுக்க வேண்டிய உழைப்பை தலைவர் வைகோ ஒரு பிறவியில் கொடுத்துள்ளார். இந்த மாநாடு வெற்றி அடைந்துள்ளது. இன்று இரவு தலைவர் நிம்மதியாக உறங்குவார். 

 




 

தலைவரின் சுமையை குறைக்க அரசியலுக்கு வந்தவன் நான் இல்லை. உங்களால் இழுத்து வரப்பட்டவன் நான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு அப்போது இயக்கத்தை கலைக்க முற்பட்டவர்களை களையெடுத்தவன் நான். அரசியல் ஆசை எனக்கில்லை. அதனால் தான் சட்டமன்றத்தில் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.  யூதாஸை மன்னித்த இயேசு நாதரின் உள்ளத்தை பெற்றவர். மத்திய மந்திரி பதவிக்காக இரண்டு மணி நேரம் அத்வானி பேசினார். அதை மறுத்தவர். இந்த இயக்கத்தின் முதன்மை நிலைய செயலாளர் பதவி தேவையில்லை அடிபடைத் தொண்டானாக இருக்கிறேன். அது போதும்"

 

இவ்வாறு பேசும்போது துரை வைகோ கண் கலங்கினார்.

தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை:


மேலும், "என்னை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் மற்றும் திருச்சி சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. இயக்கத்திற்கும் இயக்கத் தொண்டர்களுக்கும் பக்கபலமாக இருக்கும் ஒருவரை போட்டியிட தேர்வு செய்யுங்கள்" என கூறினார்.