தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி, மகன் செந்தில்குமார் எம்எல்ஏ மகள் இந்திரா 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆக ஐ.பெரியசாமி இருந்து வருகிறார்.இவரது வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது இவரது வீட்டில் காலை 7:30 மணி முதல் 4 அமலாக்கத் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 CRPF போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ . பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும் ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு 10 CRPF துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவரது மகன் செந்தில்குமார் திமுக கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பழனி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவரது வீடு சிலப்பாடியில் உள்ளது. இவரது வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 8 CRPF போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். மூன்று வீடுகளிலும் காலை 7:30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் தகவல் அறிந்து திமுக கட்சி தொண்டர்கள் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Directorate – ED என்பது இந்திய அரசின் முக்கியமான விசாரணை அமைப்பு. இது பணமோசடி, வெளிநாட்டு நாணய சட்டம் (FEMA) மற்றும் பொருளாதார குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக இயங்குகிறது. அமலாக்கத்துறை சோதனை பொதுவாக பின்வரும் காரணங்களுக்காக நடக்கிறது. பணமோசடி (Money Laundering), வெளிநாட்டு நாணய மோசடி (FEMA Violation), அனுமதி இன்றி வெளிநாட்டு முதலீடு/பரிமாற்றம்,வருவாய் ஆதாரமற்ற சொத்துகள் போன்றவற்றை ஆராய்ந்து ஈடி மூலம் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலம்  நிரூபணம் செய்து தண்டனை அளிக்கப்படும்.