திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் சுரேஷ் குமார், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அழிந்து வரும் பனை மரங்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையை ஊக்குவிக்கவும் முயற்சிக்கும் இவர், பனை பழங்களில் வீணாகும் நார்களைப் பயன்படுத்தி புதுமையான தொழிலில் ஈடுபட்டுள்ளார். பனை பழ நார்களை சேகரித்து, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஸ்பின்னிங் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பி, அங்கு நூல்களுடன் கலந்து சட்டைகள் தயாரிக்கிறார். 

Continues below advertisement

இதன்மூலம், பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்படும் பனை பழ நார்களுக்கு மதிப்பு கூட்டி, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழிலை மேம்படுத்தி வருகிறார். மேலும், பனை மரங்களைப் பாதுகாக்கும் வகையில், வீணாகும் பனை கொட்டைகளை நடவு செய்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி, பனை மரங்களை வளர்க்க ஊக்குவிக்கிறார். 

Continues below advertisement

சுரேஷ் குமார், தமிழக அரசு இதுபோன்ற சிறு தொழில்களை ஊக்குவிக்க, மானியத்தில் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அழிந்து வரும் பனை மரங்களைப் பாதுகாக்கவும், பயன்படுத்தப்படாத வளங்களை மதிப்பு கூட்டி தொழிலாக மாற்றவும் இவரது முயற்சி முன்மாதிரியாக உள்ளது. இத்தகைய புதுமையான முயற்சிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பனை மரத்தின் இலைகள், கொட்டைகள் மற்றும் காய் பகுதியிலிருந்து பெறப்படும் இயற்கை நார் தான் பனை நார். இது நூற்றாண்டுகளாக கிராமப்புறங்களில் பயன்பட்டாலும், சமீபத்தில் Eco-friendly fashion மற்றும் Sustainable clothing உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக பனை நார் ஆடைகளின் சிறப்பம்சங்களாக கூறப்படுவது, இயற்கை மற்றும் ரசாயனமற்றது  எனவும், தோலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல், hypoallergenic தன்மையைக் கொண்டது. வியர்வை உறிஞ்சும் திறன் – சூடான வானிலையில் கூட உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.நீடித்த தரம் – நீண்ட நாட்கள் கிழியாமல், வண்ணம் குறையாமல் இருக்கும்  சுற்றுச்சூழல் நட்பு – 100% biodegradable ஆகும்.

உற்பத்தி செய்யும் முறைகள்

    நார் எடுக்கும் செயல்முறை – பனை இலை மற்றும் கொட்டை பகுதியிலிருந்து நார் பிரித்து உலர்த்தப்படுகிறது.

    நெய்தல் – நார் மென்மையாக செய்யப்படுவதால் பருத்தி போல நெய்ய முடியும்.

    வண்ணமிடுதல் – இயற்கை நிறமிகள் பயன்படுத்தி Eco-friendly dyeing.

பனை நார் ஆடைகளின் வகைகள்

    ஷர்ட்டுகள் மற்றும் சட்டைகள்

    சீலைகள் மற்றும் புடவைகள்

    குழந்தைகளுக்கான உடைகள்

    பைகள் மற்றும் ஆடம்பர பொருட்கள்

பனை நார் ஆடைகள் ஏன் எதிர்காலம்?

இன்று உலகம் முழுவதும் Sustainable Fashion அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பனை நார் ஆடைகள், fast fashion ஏற்படுத்தும் மாசுபாட்டை குறைத்து, slow fashion முறையை ஊக்குவிக்கின்றன.