திண்டுக்கல்: 58 கிராம பாசன கால்வாய்க்கு நீர் திறக்க கோரி விருவீடு கிராமத்தில் கடையடைப்பு போராட்டம்
இந்த திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஒவ்வொரு ஆண்டும் போராடியே நீரை பெரும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விருவீடு கிராமத்தில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமாக உள்ளது 58 கிராம பாசன கால்வாய் திட்டம், சுமார் 70 கோடி செலவு செய்து கட்டமைப்பு செய்யப்பட்ட இந்த திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஒவ்வொரு ஆண்டும் போராடியே நீரை பெரும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்குச் சென்ற 22 தமிழக மீனவர்கள்: கைது செய்த இலங்கை கடற்படை!
இந்த திட்டத்திற்கு வைகை அணையின் நீர் மட்டம் 65 அடி எட்டியதும் தண்ணீர் திறக்க அரசாணை வழங்க கோரியும், தற்போது வைகை அணை நிரம்பி உள்ள சூழலில் இந்த 58 கிராம கால்வாயில் தண்ணீரை திறக்க கோரியும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.,
தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் - முதல்வர் ஸ்டாலினிடம் போனில் பிரதமர் உறுதி
இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விருவீடு கிராமத்தில் 58 கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து குடிநீர், கால்நடை மற்றும் விவசாயத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விடக் கூறி மாபெரும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,
ஜல்லிக்கட்டு சீசனுக்கு ரெடி ஆன மதுரை அலங்காநல்லூர் மைதானம்!
நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் திறப்பு ; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
இந்த கடையடைப்பு போராட்டத்தில் விரு வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு இதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடையடைப்பு போராட்டத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.