அனுமதியின்றி செயல்படும் மணல் ஆலைகள் மீது நடவடிக்கை! கல்குவாரிகள் ஆய்வு: பரபரப்பு தகவல்!
மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகள் தவிர அனுமதியின்றி செயல்படும் மற்ற கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு அனுமதியில்லா அலசல் மணலுக்கு (போலி மணல்) மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்குப் பின் உடனடி தடை விதிக்கப்படும். கல்குவாரிகளுக்கு T நடைச்சிட்டு இந்த வாரத்தில் இருந்து செயல்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அனுமதி இல்லா கல்குவாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் பேட்டி.

தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் அரசு திட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகளுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் பேசியபோது.
தமிழகம் முழுவதும் அதிகளவு புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிய பேருந்துகள் விரைவில் வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவு அரசு அனுமதி இல்லாமல் அலசல் மணல் (போலி மணல்) தயாரிக்கும் ஆலைகள் இருக்கிறது என்பது பத்திரிகையாளர்கள் சொன்ன பிறகுதான் எங்களுக்கு தெரியும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அவ்வாறான மணல்கள் வீடு கட்டுவதற்கு உகந்ததா என ஆய்வு செய்து எங்கள் குழுவிற்கு அறிக்கை செய்வதற்கும் மேலும் அது போன்ற ஆலைகளை மாவட்ட ஆட்சியர் மூலம் தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழக முதல்வர் கல்குவாரிகளுக்கு டி பாஸ் ( Transit pass) நடைமுறையை இந்த வாரத்தில் செயல்படுத்த உள்ளார். இதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்குவாரிகள் முழுவதுமாக ஆய்வு செய்யப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகள் தவிர அனுமதியின்றி செயல்படும் மற்ற கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் டி பாஸ் (Transit pass) என்ற நடைமுறை சீட்டு மூலமே எம் சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படும் என கூறினார்.




















