திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசுந்தர். இவருக்கு மனைவி சண்முகபிரியா, மற்றும் ரஞ்சித்குமார், தினேஷ் குமார் என்கிற இரண்டு குழந்தைகள் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குணசுந்தர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருச்சியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு, நேற்று காலை அவருக்கு சொந்தமான மாருதி ஆல்டோ காரில் சென்றார். குணசுந்தருடன் அவரது சித்தி நிர்மலா (70) என்பவரும் சென்றார்.
கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று மாலை பழனிக்கு காரில் திரும்பினர். காரை குணசுந்தர் ஓட்டி வந்த நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் பழனி அருகே கணக்கன்பட்டி பகுதியில் உள்ள மூகாம்பிகை கோவில் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிவந்த குணசுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு பழனி அனுப்பி வைத்தனர். இதில் நிர்மலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது பழனியில் தைப்பூசத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
MK Stalin : மகாத்மா காந்தி நினைவுதினம்; தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர்,முதலமைச்சர் மரியாதை!
எனவே சாலைகளில் நடந்து செல்லும் பக்தர்கள் ஓரமாக செல்லவும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனங்களை மெதுவாக ஓட்டி செல்லவும் எச்சரிக்கை பலகைகள் வைக்கவேண்டும். போலீசார் திருவிழா முடியும் வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்