காட்டு மாடு வேட்டையாடிய கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது. மூன்று பேர் தப்பி ஓட்டம். வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய மூன்று ஏர்கன் துப்பாக்கிகள், துப்பாக்கி,  தோட்டா, அரிவாள் மற்றும் கத்திகளை வனத்துறையினர் கைப்பற்றினர். தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட  மலைப்பகுதிகளில் காட்டு மாடுகளை வேட்டையாடுவதாக திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினருக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட வனத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு நேற்று பகல் 3 மணி அளவில் கே சி பட்டி குப்பம்மாள் பட்டி தோட்டங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். AP எஸ்டேட் பகுதியில் ஆய்வு செய்த போது லீசுக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் கேரளாவைச் சேர்ந்த வினோத் செபஸ்டின்  வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

Continues below advertisement

தோட்டத்தில் வேலை பார்க்கும்  கேரளாவை சேர்ந்த ஜெகன் மற்றும் ஜோசப் ஆகியோரை பிடித்து விசாரணை செய்த போது காட்டு மாடை வேட்டையாடியதை ஒத்துக்கொண்டனர். மேலும் அவர்களிடமிருந்து வேட்டையாடிய மாட்டின் இறைச்சி,  வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு ஏர் கன் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்களின் தகவலின் அடிப்படையில் அருகிலுள்ள ஏலக்காய் உலர வைக்கும் நிறுவனம் நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த ராஜ் ஜோசப் ரெஜி என்பவரின் உலர வைக்கும் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது காட்டுமாடை வேட்டையாடி அதன் இறைச்சிகளை உலர வைக்கப்பட்டு மிஷினில் இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

ராஜ் ஜோசப் மற்றும் ரெஜி இருவரும் வனத்துறையினர் வரும் தகவல் கிடைத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.  மேலும் அப்பகுதியில் ஆய்வு செய்த போது மாட்டை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய ஒரு ஏர்கன் மற்றும் கறி வெட்ட பயன்படுத்தும் அரிவாள் மற்றும் கத்திகள் கைப்பற்றப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட கேரளா மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் ஜோசப் ஆகிய இருவரிடமும் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் கூறும்பொழுது, தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் கடந்த வாரம் பதிமூன்றாம் தேதி காட்டு மாடு 1 உயிரிழந்த கிடந்தது. அதை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது மாட்டின் உடலில் துப்பாக்கி ரவை இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை எடுத்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்ட போது காட்டு மாட்டை வேட்டையாடிய கறி 9 கிலோ கிடைத்துள்ளது. மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய மூன்று துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்கள் துப்பாக்கி தோட்டா உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது. முக்கிய குற்றவாளிகளான ராஜ் ஜோசப் ,ரெஜி, வினோத் செபஸ்டின் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காட்டு மாடு வேட்டையாடிய சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.