திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பகுதியைச் சேர்ந்த ராஜா(எ)அஜித்ராஜா, ஆத்தூர் ஆசைக்கண்ணன், தாண்டிக்குடி பெரும்பாறை மணி(எ)மணிகண்டன் ஆகியோர் கடந்த 14.3.2015ல் விற்பனைக்காக 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றசாட்டை நிரூபிக்க தவறியதால் 3 பேரும் விடுதலை செய்யப்படுவதாக
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கை முறையாக விசாரித்து குற்றசாட்டை நிரூபித்து தண்டனை பெற்றுத்தர தவறியதற்காக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு அப்போதைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மீது துறைரீதியான நடவடிக்கையை 6 மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்கவும், மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்-செம்பட்டி சாலையில் வக்கம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் விற்பனை செய்வதற்காக 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பகுதியைச் சேர்ந்த ராஜா(எ)அஜித்ராஜா, ஆத்தூர் ஆசைக்கண்ணன், தாண்டிக்குடி பெரும்பாறை மணி(எ)மணிகண்டன் ஆகியோர் கடந்த 14.3.2015ல் திண்டுக்கல் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை இரண்டாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை இரண்டாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பளித்தார். அதில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றசாட்டை நிரூபிக்க தவறியதால் 3 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
அதே நேரம், வழக்கை முறையாக விசாரித்து குற்றசாட்டை நிரூபித்து தண்டனை பெற்றுத்தர தவறியதற்காக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு அப்போதைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மீது துறைரீதியான நடவடிக்கையை 6 மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்