திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் ஊராட்சி பகுதியில் 9 வார்டுகள் உள்ளன, இந்த பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அடுக்கம் ஊராட்சி மன்ற தலைவராக கண்ணன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் ஊராட்சி மன்ற உறுப்பினராக 9 நபர்கள் பொறுப்பு வகித்து வருகின்றனர், இவர்களுக்கு மாதம் ஒரு முறை அடுக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற திட்டங்கள் மற்றும் நடைபெற இருக்கும் திட்டங்கள் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம் ,
இந்நிலையில் இன்று 19வது ஆலோசனை கூட்டம் இந்த அலுவலகத்தில் நடைபெற்றது, இதில் அடுக்கம் ஊராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று இருக்கும் வரவு செலவு கணக்குகள் குறித்த கோப்புகளை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர், இதற்கு ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி செயலரும் கோப்புகளை தர மறுத்ததாகவும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களால் கூறப்படுகிறது , இதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெறும் அறையில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை உணவு அருந்தாமல் திடீரென்று வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டதில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி அடுக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் இது குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இதில் கடந்த இரண்டு வருடங்களாக இந்த பகுதியில் செய்த திட்டங்கள் குறித்து முறையாக தெரிவிக்கவில்லை எனவும்,கடந்த மாதம் கேட்டதற்கு இந்த மாதம் தருகிறோம் என கூறினார்கள் ஆனால் தற்போதும் தங்களை அலட்சியம் படுத்துவதாக தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் மீது குற்றம் சாட்டினார்கள்.
மேலும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் போது நடைபெற்ற திட்டங்கள் தங்களிடம் எடுத்து கூறவில்லை என்றும், தங்கள் பதவி வகிக்க இரண்டு வருடங்கள் மட்டுமே மீதம் உள்ளன என்றும் அதுவரைக்கும் மக்களின் திட்டங்கள் செய்யவேண்டும் எனவும் இல்லையெனில் செருப்பு அடி தான் வாங்கணும் என கூட்டத்தில் தங்கள் மன குமுறலை வெளிப்படுத்தினர் .தொடர்ந்து மாதம் ஒரு முறை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு முறையான அழைப்புகள் வர வில்லை எனவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வரும் நாட்களில் வரவு செலவு கணக்குகள் வழங்கப்படும் எனவும் நடைபெற இருக்கும் திட்டங்கள், நடைபெற்ற திட்டங்களின் கோப்புகள் அளிக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததை தொடர்ந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழத்தில் இன்று பல்கலைகழக தினவிழா - அகில இந்திய மகளிர் கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது,இந்த பல்கலைக்கழத்தின் கட்டுப்பாட்டில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்குகின்றன , இந்நிலையில் காரைக்குடி பகுதியில் கடந்த மாதம் 21ஆம் தேதி தென்னிந்திய பல்கலை மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது, இந்த போட்டியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் கலந்து கொண்டு இரண்டாம் பரிசினை தட்டி சென்றனர், இதனையடுத்து கடந்த 6-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் அகில இந்திய மகளிருக்கான கபடி போட்டியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் கலந்து கொண்டு 3- ஆம் பரிசினை வென்றனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட 12 மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது,இந்நிலையில் இந்த அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைகழக தினவிழா கொண்டப்பட்டது, இவ்விழாவில் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என்றும்,பெண்களின் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது ,இதனையடுத்து கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி சார்பாக ஊக்க தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது, மேலும் தென்னிந்திய அளவில் ஹாக்கி,டேபிள் டென்னிஸ்,கை பந்து,கொக்கோ உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்ட 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது, மேலும் இவ்விழாவில் அன்னை தெரசா மகளிர் விஞ்ஞானி பட்டமும் இருவருக்கு வழங்கப்பட்டது, இவ்விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்,பதிவாளர், முன்னாள் துணை வேந்தர்,பேராசிரியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.