திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் தாலுகா கன்னிவாடி வன சரகத்திற்க்கு உட்பட்ட பன்றிமலை, அழகுமலை ,தோனிமலை, கோம்பை, பண்ணைப்பட்டி உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குட்டைகொம்பன் என்ற காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களிலும் விளை பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. அதேபோல் பொதுமக்களை துரத்துவதும் வீடுகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.
https://tamil.abplive.com/sports/ipl/chennai-super-kings-won-the-match-by-13-runs-50613/amp
மேலும் தர்மத்துப்பட்டி செல்லும் சாலையில் வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் தோனிமலை, கீழ்மலை பகுதியான கோம்பை, நாய் ஓடைப் பகுதியிலும் தொடர்ந்து காட்டு யானை சுற்றி வருகிறது. இந்த யானையை பிடிக்கும் முயற்சியில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 57 வயதுடைய கலீம் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டது.
`நண்பர்கள் தான் உலகம்’.. `நடன மாஸ்டர் கிடையாது’ - விஜய் பற்றி மனம் திறந்த எஸ்.ஏ.சி - ஷோபா தம்பதி!
அதேபோல் மற்றொரு கும்கி சின்னத்தம்பி யானை நேற்று கொண்டு வரப்பட்டது. ஊருக்குள் வந்து சேதம் விளைவித்தும், பொது மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை எங்கு உள்ளது என்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். யானை பகல் நேரத்தில் உறங்கும்தன்மை கொண்டதால் அதற்காக ஒரு சில இடத்தை தேர்வு செய்யும் அந்த இடத்தை கண்டறிந்த உடன் உடனடியாக கும்கி யானைகள் அழைத்துச்செல்லப்படும். இந்த இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் ஒற்றை காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்