கேரளா​வின் கொல்​லம் நகரில் 79 வயது முதி​ய​வரிடம் டிஜிட்​டல் அரெஸ்ட் செய்​துள்​ள​தாக கூறி ஒரு கும்​பல் ரூ.3.72 கோடி மோசடி செய்​துள்​ளது.

Continues below advertisement

இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி வியக்க வைக்கும் வகையில் உள்ளது. பல்வேறு முன்னேற்றங்களுக்கு இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுகிறது. அதே நேரம் சில சமூக விரோதிகள் தொழில்நுட்பங்களை வைத்து பிறரிடம் பணம் பறிக்கவும் பயன்படுத்துகின்றனர். சில பங்கு வர்த்தகம், தங்க முதலீடு, பிரதமர் இலவச திட்டம் என பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இதனை நம்பி பணத்தை சிலர் இழக்கின்றனர். ஒரு சிலரிடம் வெளிமாநிலத்தில் இருந்து போலீசார் பேசுவது போல் பேசி 'டிஜிட்டல் அரஸ்ட்' செய்துள்ளதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர். மாவட்டத்தில் இவ்வகையான இணைய மோசடிகளில் ஏமாறும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வகையான மோசடிகளில் பட்டதாரிகள் இரையாகுவது தான் சோகமானது. மோசடி செய்யும் நபர்கள் மஹாராஷ்டிரா, பீஹார், டில்லி உள்ளிட்ட மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து இச்செயல்களில் ஈடுபடுவதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

Continues below advertisement

கேரளா​வின் கொல்​லம் நகரை சேர்ந்த 79 வயது முதி​ய​வர் ஒரு​வருக்கு கடந்த ஜூலை 7-ம் தேதி வாட்​ஸ்​ஆப் வீடியோ அழைப்​பில் வந்த ஒரு​வர் தன்னை பிஎஸ்​என்​எல் அதி​காரி என அறி​முகப்​படுத்​திக் கொண்டுள்ளார். முதி​ய​வரின் செல்​போன் எண் சட்​ட​விரோத செயல்​களில் பயன்​படுத்​தப்​பட்டு இருப்​ப​தாக​வும் இது தொடர்​பாக மும்பை சைபர் கிரைம் போலீ​ஸார் விசா​ரித்து வரு​வ​தாக​வும் கூறி​யுள்​ளார்.

இதையடுத்து போலீஸ் சீருடை​யில் வந்த மற்​றொரு​வர் முதி​ய​வரின் ஆதார் எண்ணை பயன்​படுத்தி ஒரு வங்​கிக் கணக்கு திறக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் அது குற்​றச் செயல்​களுக்கு பயன்​படுத்​தப்​பட்டு வரு​வ​தாக​வும் அச்​சுறுத்​தி​யுள்​ளார். மேலும் முதி​ய​வரை டிஜிட்​டல் அரெஸ்ட் செய்​துள்​ள​தாக கூறி ஒரு போலி உத்​தரவை காட்​டி​யுள்​ளார். இதில் விசா​ரணை அதி​காரி​யிடம் வாட்​ஸ்​ஆப் அழைப்​பில் தொடர்ந்து தொடர்​பில் இருக்க வேண்​டும் என்ற நிபந்​தனை அடிப்​படை​யில் முதி​ய​வருக்கு போலி​யாக ஜாமீன் வழங்​கப்​பட்​டுள்​ளது. பிறகு முதி​ய​வரை மிரட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 29 வரை அந்த கும்​பல் ரூ.3.72 கோடி மோசடி செய்​துள்​ளது. இது தொடர்​பாக முதி​ய​வர் அளித்த புகாரின் பேரில் கொல்​லம் சைபர் கிரைம் போலீ​ஸார் கடந்த செவ்​வாய்க்​கிழமை வழக்​குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.