ஜெயலலிதா மறைந்ததிலிருந்து தொலைந்த எனது மகிழ்ச்சியை திமுகவில் இணைத்து திரும்ப எனது மகிழ்ச்சியை தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். சின்னமனூர் பகுதியில் திமுக சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜா, ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
பின்னர் நிகழ்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைந்ததில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி வரை என்னுடைய மகிழ்ச்சியை நான் தொலைத்து இருந்தேன், தற்போது திமுகவில் இணைந்து மீண்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த மகிழ்ச்சியை எனக்கு திரும்பு தந்துள்ளார். நான் ஒரு தொண்டனாக மட்டுமே தான் திமுகவில் இணைந்துள்ளேன். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கு பதில் சொல்ல கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் இருந்து வந்தார்.
மக்கள் விரும்புகிற ஆட்சியை கடந்த 5 ஆண்டுகளில் கொடுத்து நாட்டு மக்களை பற்றி சிந்திக்க கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 40 சதவீத நிதியில் 4 சதவீதம் மட்டும் வழங்கியது மத்திய அரசு, நிதி வழங்கவில்லை என்றாலும், மாநில நிதியில் இருந்து நாங்கள் அறிவிக்கின்ற திட்டங்களை மட்டும் இல்லை நீங்கள் (மத்திய அரசு) அறிவிக்கின்ற திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார் .
முதலமைச்சராவதற்கு எந்த அளவு நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்பது நாடறிந்து, எனக்கு கொடுத்து பதவியை நன்றியுடன் மீண்டும் ஜெயலலிதாவிற்கு கொடுத்து விட்டு வந்தவன் நான் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் 9 கோள்களில் முதன்மையான கோல் உதயசூரியன் தான். அந்த வெற்றி சின்னம் நமக்கு கிடைத்து இருக்கிறது. அதனை வெற்றி பெற வைக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.