ஸ்ரீபெரும்புதூரில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி நிகழ்ச்சி எதற்காக ரத்து செய்யப்பட்டதற்கு ஜெயின் கமிஷனிடம் இன்னும் இந்த கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை அதேபோல் கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்- அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி

Continues below advertisement

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சி.டி.நிர்மல்குமார்

திமுக கூட்டணியில் இடம் பெற்றவர்கள் அழைத்து தவெக அரசு அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பது நியாயம் என்றால் எந்த கூட்டணியும் நியாயம் தான்  டிடிவி தினகரன் கூறியது கொடுத்த கேள்விக்கு: 

Continues below advertisement

இந்த பிரச்சனை எங்கிருந்து வந்தது என்று சொல்கிறேன்.எடப்பாடியும் ஸ்டாலினும் எப்போது சேர்ந்து பயணிக்க முடிவு செய்தார்களோ அதுதான் இந்த பிரச்சனை தொடங்கியது. டிடிவி தினகரன் எதற்கு கட்சி தொடங்கினார். எடப்பாடி காலி செய்ய வேண்டும் துரோகி எடப்பாடி துரோகி பன்னீர்செல்வம் என்று சொல்லி தான் கட்சியை தொடங்கினார். ஒன்பது ஆண்டு பன்னீர்செல்வத்தை துரோகி என்று சொல்லிவிட்டு அவரை முதல்வராக அவர் ஒரே எம்எல்ஏவை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்றார். அவர் பேசலாமா இது நியாயமா. அவருடன் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்தனர்  இன்று அவர்களை நடுத்தெருவில் நிற்கிறார்கள். எடப்பாடியும் ஸ்டாலினும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று மக்கள் கொடுத்த தீர்ப்பா எங்கள் தலைவர் முதல்வராக வேண்டும் என்று தான் மக்கள் தீர்ப்பு கொடுத்தார்கள். மக்களை ஏமாற்ற இவர்கள் நடந்து கொண்டதால் தான் அந்த கூட்டணியில் இருந்து நேர்மையாக பயணிக்க முடியாமல் வெளியே வந்தனர். இதை அவர்களாலே மறுத்து பேச முடியவில்லை.

மரியாதையை தக்க வைத்துக் கொள்ளலாம்.

ஸ்டாலினை காதர் மைதீன் உள்ளிட்டவர்களுக்கு போன் செய்து எடப்பாடி முதல்வராக வேண்டும் என்று சொன்னார்கள் இதை விட கேவலமான அரசியல் எங்கு உள்ளது. அண்ணன் டிடிவி எல்லாம் புரியும் அவர் காலத்திற்கு ஏற்றார் போல தண்ணி போவது போல் வளைந்து வளைந்து போகிறார். அவரின் போதாத காலம் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அந்த எடப்பாடி முதல்வராக்க கவர்னர் மாளிகை போல் நின்றார். அவருக்கான மரியாதையை பொதுத்தளத்தில் இழுந்து விட்டார் கொஞ்ச நாள் அவர் பேசாமல் இருந்தால் இருக்க மரியாதையை தக்க வைத்துக் கொள்ளலாம்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயர்ந்தவர்களுக்கு அரசு பணி கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு: 

எந்தெந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என முதல்வர் ஆலோசித்து செய்வார்கள். பல இடங்களில் இது போல துரோகங்கள் நடைபெற்று உள்ளது. ஸ்டெர்லைட் குறித்து பேசிய திமுக அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய அரசை எதிர்ப்பதற்கு திமுக தவெக ஓரணியில் இணைய வேண்டும் என திருமா கருத்து குறித்த கேள்விக்கு:

எங்கெல்லாம் எதிர்க்க வேண்டுமா அப்போது நூறு சதவீதம் எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறோம். தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு வந்தாலும் முதல் குரல் தமிழக வெற்றிக்கழகம் கொடுக்கும். ஒன்றிய அரசு மக்களுக்கு எந்த விரோத செயலை செய்தாலும் தமிழக வெற்றி கழகம் குரல் கொடுக்கும் அப்படித்தான் முந்தைய காலங்களில் இருந்தும் எந்தவித சமாதானமும் தலைவர் செய்து கொள்ள மாட்டார். 

திருமாவில் கருத்தை வரவேற்பவராக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு:

கொள்கை எதிரி தெளிவாக சொல்லிவிட்டோம் அதில் சமாதானம் இல்லை. எவ்வளவு சர்ச்சைகள் பொய்யான பிரச்சாரங்கள் திமுகவினர் செய்தனர். அதனை தாண்டி தான் இங்கு வந்துள்ளோம். கொள்கை ரீதியாக அரசியல் ரீதியாகவோ எந்த சமாதானத்தையும் முதலமைச்சர் செய்ய மாட்டார்.