பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை 4.20 கோடி காணிக்கை

4 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 965 ரூபாயும், 1.914 கிலோ தங்கமும், 19.164 கிலோ வெள்ளியும், 288 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது

Continues below advertisement

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம், பொருட்கள் உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

Continues below advertisement


அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதை தொடர்ந்து 2 மாதங்களாக காணிக்கை எண்ணும் பணி நடைபெறவில்லை. இதற்கு இடையே கோவிலில் சூரசம்ஹாரம், கார்த்திகை தீபத்திருவிழா ஆகிய விழாக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றன. இதையடுத்து கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன் தினம் நடைபெற்றது.


திங்கள் கிழமையின்போது கோவிலின் கார்த்திகை மண்டபத்தில் நடந்த காணிக்கை எண்ணும் பணிக்கு, கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார், கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அலுவலர்கள், பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 

உண்டியல் காணிக்கை மூலம் 2 கோடியே 36 லட்சத்து 64 ஆயிரத்து 825 ரூபாய் வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 150 கரன்சிகள் இருந்தன . இது தவிர தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில், விளக்கு உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டு இருந்தது. அதன்படி 1,453 கிராம் தங்கமும், 15 கிலோ வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.


ஆனால் காணிக்கை எண்ணும் பணி நிறைவடையாததால் செவ்வாய்க்கிழமை நேற்று மாலை வரையில் 2 ஆவது நாளாக காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் உண்டியல் காணிக்கை மூலம்  1 கோடியே 92 லட்சத்து 63ஆயிரத்து 140 ரூபாயும், தங்கம் 461 கிராம், வெள்ளி 4,169 கிராம், வெளிநாட்டு கரன்சி 138 இருந்தது. அதன்படி 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மூலம் 4 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 965 ரூபாயும், 1.914 கிலோ தங்கமும், 19.164 கிலோ வெள்ளியும், 288 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது.  

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement