மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை கைதிகள் தண்டனை காலம் முடிந்து, விடுதலையாகும் போது, அவர்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக சிறை வளாகத்திற்குள் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் மூலம் பூந்தொட்டிகள், சிமெண்ட் கிராதிகள், மருத்துவ பேண்டேஜ், இனிப்பு வகைகள் போன்ற பொருட்களை கைதிகள் தயாரிக்கின்றனர். இதனை சிறைத்துறை நிர்வாகம் கைதிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறன்றனர். 



இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி 13 தையல் இயந்திரங்கள் மூலம் ஆடைகள் தைக்க 18க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டு ஆடைகள் தைக்கப்பட்டுள்ளன. இப்பொருட்கள் அனைத்தும் சிறைத்துறை அங்காடி மூலம் பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை காவலர்கள் உதவியுடன் சிறைக்கைதிகள் ஆடைகளை சிறை அங்காடியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக 300-550 ரூபாய் வரை ஆடைகள் வைக்கப்பட்டு விலைக்கேற்ற தரத்துடன் ஆடைகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆடைகளில் FREEDOM என்ற பெயரில் சிறை அங்காடியில் கைதிகள் மற்றும் சிறைக்காவலர்கள் விற்பனை செய்து வருகின்றனர். கைதிகள் தைத்த ஆடைகளை பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர்.