மதுரை குரூப் லிவிங் பௌண்டடின் சார்பாக ஆட்டிசம் குழந்தைகளுக்கு நூதனமான பலன் கொடுக்கும் அணுகுமுறைகள் மற்றும் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. இதில்  ஆட்டிசம் நிபுணர் மற்றும் 'எகனாமிக் டைம்ஸ்'அவார்ட்ஸ், 'இந்தியா'ஸ் மோசட் இன்னோவேடிவ் எமெசேமம் மைக்ரோ டாப் நான்கு அங்கீகாரம் பெற்ற பிரபல மருத்துவர் ராஜலக்ஷ்மி கந்தஸ்வாமி உரையாற்றினார்.






அப்போது பேசுகையில்..,” தமிழ்நாட்டில் ஆட்டிசம் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த்து வருகிறது. மதுரையில் மட்டுமே முன்னூறுக்கும் மேற்பட்ட ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளன. ஆய்வுகளின் படி இதே நிலைமை நீடித்தால் 2025-ம் ஆண்டில்  50% குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படும் அபாயம் உள்ளது என எம்.ஐ.டி ஆய்வாளர் கூறி இருக்கிறார். இதற்கான தீர்வு உள்ளது. ஆனால் இந்த தீர்வை மக்களுக்கு கொண்டு சேரவேண்டிய பொறுப்பு மத்திய, மாநில  அரசுகளுக்கு உள்ளது. ஏனென்றால் இந்த விஞ்ஞானபூர்வமான தீர்வை பற்றின விழிப்புணர்வு மக்கள் இடம் இப்போதைய நிலைமையில் சென்றடையவில்லை.




இந்தநிலை மாறவேண்டும். அது இப்பொழுதே முடியும். எப்படி என்றால் தமிழக அரசின் 'சி.எம்.சி.எச்.ஐ.எஸ்' திட்டத்தின் கீழ் இந்த ஆட்டிசம் தீர்வை சேர்த்தால் ஆட்டிசம் பாதித்த குழந்தையின் பெற்றோர்கள் இதை தேர்ந்தெடுத்து அவர்கள் குழந்தைகளை பயனடைய  செய்ய முடியும். இந்த திட்டத்தின் கீழ் ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ருபாய் இப்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இது ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தெரியாது.




ஏனென்றால் இதனை பற்றிய அரசு விழிப்புணர்வு மிகவும் குறைவு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான துறைக்கு தலைமை வகிக்கிறார். அதனால் அவர் உடனடியாக இதில் தலையிட்டு இந்த ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு இந்த ஆட்டிசம் தீர்வு போய் சென்றடைய ஆணை பிறப்பிக்கவேண்டும். இப்படி செய்தால்  ஆட்டிசம்க்கான தீர்வுகள் கிடைக்கும். இது முன்னுதாரணமாகமாறி, குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும்” என கேட்டுக் கொண்டார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN 12th Result 2023: பிளஸ்-2 தேர்வில் 514 மதிப்பெண், ஆனால் 4 பாடத்தில் பெயில் அதிர்ச்சியடைந்த மதுரை தம்பதி




மேலும் செய்திகள் படிக்க - TN 12th Result 2023: பிளஸ்-2 தேர்வில் 514 மதிப்பெண், ஆனால் 4 பாடத்தில் பெயில் அதிர்ச்சியடைந்த மதுரை தம்பதி









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண