மேலும் அறிய

கம்பம், போடி எல்லைகளில் கஞ்சா விற்பனை: அதிர்ச்சி! 35 கிலோ கஞ்சா பறிமுதல், பெண் உட்பட 3 பேர் கைது!

இரு மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள போடி, கம்பம் நகர் பகுதிகளில் இருபோக விவசாயத்திற்கு மட்டும் பிரபலமானது அல்ல, இங்கு கஞ்சா விற்பனையும் பிரபலமானது என கூறப்படுகிறது. 

கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் மெட்டு, குமுளி, கட்டப்பனை, வண்டிப்பெரியார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரள மாநிலத்தவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கம்பம் பகுதிக்கு அதிகம் வருவதுண்டு, அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ந்து வரும் நகரமாக கம்பம் திகழ்கிறது. அதேபோலத்தான் இரு மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள போடி நகர் பகுதியும், கம்பம் இருபோக விவசாயத்திற்கு மட்டும் பிரபலமானது அல்ல, இங்கு கஞ்சா விற்பனையும் பிரபலமானது என கூறப்படுகிறது. 

கம்பம், போடி எல்லைகளில் கஞ்சா விற்பனை: அதிர்ச்சி! 35 கிலோ கஞ்சா பறிமுதல், பெண் உட்பட 3 பேர் கைது!

கம்பம் பகுதியில் சட்டவிரோதமாக அதிக அளவில் கஞ்சா விற்பனை என்பது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என புகார் எழுந்துள்ளது. தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கம்பத்திற்கு வந்து கஞ்சா வாங்கி கொண்டு செல்வது தற்போதும் தொடர்கதையாகி வருகிறது.இந்த நிலையில், ஒரிசாவில் இருந்து தமிழகத்திற்கு சொகுசு காரில் கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து தேனி மாவட்டத்தில் விற்பனை செய்து வந்த பெண் உள்பட மூன்று பேர் கொண்ட கும்பலை குமுளி காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 35 கிலோ கஞ்சா மற்றும் விற்பனை செய்து வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கம்பம், போடி எல்லைகளில் கஞ்சா விற்பனை: அதிர்ச்சி! 35 கிலோ கஞ்சா பறிமுதல், பெண் உட்பட 3 பேர் கைது!

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக குமுளி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலினை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சூரிய திலகரணி தலைமையில்  லோயர் கேம்ப் சோதனைச் சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது சொகுசு கார் ஒன்று சந்தேகப்படும்படியாக வருவதை பார்த்து வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்தில் 36 கிலோ கஞ்சாவை பெண் உள்பட 3 பேர் சாக்கு மூட்டையில் அடைத்து கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேர் கொண்ட அந்த கும்பலை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்.

கம்பம், போடி எல்லைகளில் கஞ்சா விற்பனை: அதிர்ச்சி! 35 கிலோ கஞ்சா பறிமுதல், பெண் உட்பட 3 பேர் கைது!

விசாரணையில்  மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த முனியசாமி பாலசுப்பிரமணியன் மற்றும் செல்வி ஆகிய மூன்று பேரும் கூட்டாக சேர்ந்து ஒரிசாவில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து தமிழகப் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்து அவர்கள் வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சம் அவர்களது செல்போன் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய சொகுசு காரினையும் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா விற்பனையில் இவர்களுடன் யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தமிழக கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டத்தில் அடிக்கடி கஞ்சா வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Gold Silver Rate Mar.1st: 1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
Iran Attack Dubai Reason: துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
Iran Khamenei Dead: “கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
“கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
Top 10 News Headlines: அதிர்ச்சி கொடுத்த தங்கம், கொல்லப்பட்ட ஈரான் தலைவர் கமேனி, ரஷ்யா கோரிக்கை - 11 மணி செய்திகள்
அதிர்ச்சி கொடுத்த தங்கம், கொல்லப்பட்ட ஈரான் தலைவர் கமேனி, ரஷ்யா கோரிக்கை - 11 மணி செய்திகள்
TN Roundup: ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், பிரதமர் மோடி மதுரை பயணம், பனிமூட்டம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், பிரதமர் மோடி மதுரை பயணம், பனிமூட்டம் - தமிழகத்தில் இதுவரை
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
Embed widget