தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து நடத்தும் 4-ஆவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் , பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் .சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளையும், பல்வேறு துறைகளின் அமைக்கப்பட்டிருந்த கருத்துக் கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்கள்.
மிழ்நாடு அரசு, புத்தகம் வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும், அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள பல்வேறு வகையான நூல்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்காகவும் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழா 21.12.2025 முதல் 28.12.2025 வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது.இவ்விழாவில் கலந்துகொண்ட தேனி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்புத்தகத்திருவிழா நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. புத்தக்திருவிழா நடைபெறவுள்ள 8 நாட்களும் மாலை நேரத்தில் பல்வேறு எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் சிந்தனைமிக்க இலக்கிய அரங்கம் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் செந்தில்கணேஷ் ராஜலெட்சுமி அவர்களின் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வழக்கறிஞர் செல்வி மதிவதனி அவர்கள், மூன்றாம் நாள் நிகழ்வில் எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள், நான்காம் நிகழ்வில் பேச்சாளர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள், ஐந்தாம் நிகழ்வில் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள், ஆறாம் நிகழ்வில் எழுத்தாளர் ஓசை காளிதாசன் அவர்கள், ஏழாம் நாள் நிகழ்வில் கலைமாமணி திரு.ஐ.லியோனி அவர்களின் பட்டிமன்றம், நிறைவுநாள் நிகழ்வில் ஈரோடு மகேஷ் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சிகள் என பல்வேறு ஆளுமைகளின் சிந்தனைமிக்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
நமது முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் பயின்றவர். படிப்பின்மீதும், புத்தக வாசிப்பின் மீதும் அவருக்கு இருந்த ஆர்வத்தால்தான் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி ஆனார். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களால் ஏற்படும் சுமையை குறைப்பதற்காக, எடை குறைந்த செயற்கைகால்களை வடிவமைத்த மனிதநேய மிக்க பண்பாளர். அதுபோல இன்றைய இளைய தலைமுறையினர் வாழ்க்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளது. இப்புத்தத் திருவிழா சமுதாய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அருமையான முயற்சியாகும். இளைஞர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாங்கி படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என தேனி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.