திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே அடிதடி ரகளை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணை தலைவர் மண்டை உடைப்பு போலீசார் உடன் தள்ளுமுள்ளு.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சரத் என்பவர் பேசும்போது இந்து முன்னணியைச் சேர்ந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இந்து முன்னணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பில் ஏற்படவிருந்த நிலையில் தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை செய்து கலைத்தனர்.

Continues below advertisement

ஆனால் மீண்டும் தெருமுனை பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தகராறு முற்றி பின் கைகலப்பாக மாறியது.  கைகலப்பிற்கு பின் இரு தரப்பினரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கவிருந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சரத் என்பவர் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோசங்கள் முழங்க பாரதிய ஜனதா கட்சியினர் சேர்ந்தவரும் பதில் கோசங்கள் முழங்கி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

அப்போது இருவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதங்கள் முற்றி கைகலப்பு முற்றியது. அங்கு இரு தரப்பினரும் அடிதடி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகனை தடியால் தாக்கியதில் அவருக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டது. இதில் காவல்துறையினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனை கல்லூரி முன்பாக போர்க்களம் போல் காட்சியளித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்து கலவர இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொழுது பாரதிய ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதங்கள் முற்றியது.