நவராத்திரி நிறைவு விழாவாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை விழா என்பது தமிழ்நாட்டில் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பல்வேறு இடங்களில் சாதி, மதம் பார்க்காமல் ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தாங்கள் செய்கின்ற தொழிலுக்கு மரியாதை செய்யும் விழாவாக இது பார்க்கப்படுவதால், வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.






அதே போல் தங்களின் வீடுகளை சுத்தம் செய்தும் வாகனங்கள் பொருட்களுக்கு மாலை, பொட்டு அணிவித்தும் சாமி படங்களை வைத்து படையலிட்டும் மக்கள் விழாவை சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர். ஆயுத பூஜை விழாவின் பொழுது நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிறுவனம் சார்பில், இனிப்புகள் வெகுமதிகள் உள்ளிட்டவை வழங்குவது வழக்கமாக உள்ளது. இதேபோன்று அரசு அலுவலகங்கள் அரசு சார்ந்த இடங்களில் கூட, ஆயுதபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் தனியார் கல்லூரி மைதானத்தில், தனியார் நிறுவனம் தங்களது ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கினர்.




ஆயுத பூஜை இன்று காலை முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையம் பின்புறம் நான்கு வழிச்சாலையில் சின்ன உடைப்பு அருகே  உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கல்லூரி. இந்த கல்லூரி மைதானத்தில் ஏரோடான் சாப்பர் மற்றும் மை பிளை ஸ்கை நிறுவனம் மூலம் வரும் 24ம் தேதி வரை மதுரையை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று அதன் ஊழியர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு ஹெலிகாப்டர் உடன் இணைந்து பூஜைகளை மேற்கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பாதுகாப்பு காரணங்களுக்காக பூஜைகளின் போது எளிதில் தீ பிடிக்கும் சாம்பிராணி, சூடம், பத்தி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.




தமிழ்நாடு முழுவதும் தேங்காய், பழம், பொரி, சுண்டல் படையலிட்டு தொழிலுக்கு நன்றி தெரிவிக்கும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் சுவாமிக்கு படையலிட்ட பொரி, சுண்டல் பிரசாதங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் தனியார் கல்லூரி மைதானத்தில், தனியார் நிறுவனம் தங்களது ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள் படிக்க - Ayudha Pooja 2023: தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு..சாப்பிட்ட இலையை எடுத்த மண்டல குழு தலைவர் - காஞ்சியில் நெகிழ்ச்சி


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - NIA Arrest : ‘ஹோட்டல் ஊழியர் போல பதுங்கியிருந்த பயங்கரவாதி?’ தேனியில் அதிரடி கைது..!