எடப்பாடி பழனிச்சாமியின் முதல் தேர்தல் வாக்குறுதி புஸ்வானம் ஆனது. அதேபோல், இரண்டாவது தேர்தல் வாக்குறுதியும் புஸ்வானம் ஆகிவிட்டது. தற்போது 2000 ரூபாய் முதியோர் தொகை வழங்குகிறோம் என்று கூறியவர் கடந்த அதிமுக ஆட்சியில் 24 லட்சம் முதியவர்களுக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகையை நிறுத்தியவர்களும் அதிமுகவினர்தான். அதற்கு பதில் சொல்வாரா எடப்பாடி பழனிச்சாமி என்று கேள்வி எழுப்பினார் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி.
தமிழகத்தில் கல்விக்காக ஏராளமான திட்டங்களை தொடர்ந்து முதல்வர் அறிவித்து வருகிறார். அதற்கு மிகப்பெரிய நிதியும் வழங்கி வருகிறார். 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டங்களும் கொண்டு வரவில்லை. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது கல்வி கடனை ஏன் ரத்து செய்யவில்லை. மத்தியில் இருக்கும் மோடி அரசு தமிழக மாணவ, மாணவிகளின் கல்விக்கான நிதியை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும் நிதியை ஒதுக்கவில்லை. மும்முனை மொழியை கொண்டு வந்தால் மட்டுமே நிதியை ஒதுக்குவோம் என்று கூறி வருகின்றனர். இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம். எடப்பாடி பழனிச்சாமி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். அனைத்து வாக்குறுதிகளும் மக்களிடையே வெறும் புஸ்வானம் தான் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். அது புஷ்பவனம் ஆகியது.
தற்போது, இரண்டாம் முறையாக மீண்டும் தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளார். இதுவும் புஷ்பவனமாகத்தான் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கும் அலுவலகத்தில் அமர வேண்டும் அலுவலகத்தை யாரும் பிடிக்க கூடாது. என்பதற்காக பிஜேபியில் கூட்டணி வைத்துள்ளார். முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டணியில் இணையவில்லை. தமிழக மக்கள் தீர்மானமான முடிவில் உள்ளனர். தமிழகத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக ஸ்டாலின் அரசு வரவேண்டும் என உறுதியாக உள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி பொருளாதார நிபுனர் கிடையாது. வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றி வருகிறார். இந்தியா மக்களின் மத்தியில் உள்ள நம்பிக்கையான குரல் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் திமுகவுக்கு வருவார்களா? என்ற கேள்விக்கு ?கட்சிக்கு கூட்டணிக்கு வருவதும், அவர்களை முடிவு செய்வதும் தமிழக முதல்வர் கையில் தான் உள்ளது. தமிழக முதல்வர் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கல்வி நிலையங்களை துவக்கி உள்ளார். எங்கு பார்த்தாலும் கல்லூரிகள் யாரும் வெகு தூரம் சென்று கல்வி கற்க வேண்டிய அவசியம் கிடையாது.
அந்த அளவிற்கு கல்லூரிகளை உருவாக்கியுள்ளார். கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தற்போது வரை ஒதுக்கவில்லை. பலமுறை தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தும் கல்விக்கான நிதியை ஒதுக்காமல் மும்முனை மொழியை கொண்டு வந்தால் மட்டுமே நிதி ஒதுக்கப்படும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியை கொண்டு வர வேண்டும் இன்று அப்பொழுது சொன்ன காங்கிரஸ் மக்களால் தூக்கி எறியப்பட்டனர். அதேபோல் தற்போது பாரதிய ஜனதா கட்சியும் ஹிந்தியை திணிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உள்ளனர். இவர்கள் நாட்டை விட்டு தூக்கி எறியப்படுவார்கள். அதிமுக பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த கட்சியிலிருந்து வேறொருவர் மற்றொரு கட்சியை துவக்குவார். என இவ்வாறு திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.