தேர்தல் வாக்குறுதிகளுடன் அம்மன் கவுன்சிலர் வேட்பாளர்? கொடைரோடு அருகே வைரலான பிளக்ஸ் பேனர்!
தேர்தலில் தங்களது சின்னமாக பொங்கல் பானை,திரிசூழம், எழும்பிச்சம்பழம் உள்ளிட்ட படங்களுடன் நூதன முறையில் பேனர் வைத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கொடைரோடு அருகே பொம்மணம்பட்டி கிராமத்தில்,காளியம்மன்,பகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில்,தேர்தல்வாக்குறுதியுடன் அம்மன் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவது போலவும் ,அதன் தேர்தல் சின்னமாக பொங்கல் பானை,திரிசூழம்,எழும்பிச்சம்பழம் உள்ளிட்ட வாசகங்களுடன் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பொம்மனம்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன்,பகவதியம்மன், முத்தாலம்மன் கோவில் வைகாசி திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவில் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க அம்மன் பூங்காரகம் அழைக்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ காளியம்மன், பகவதியம்மன்,முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு,பால்குடம்,தீச்சட்டி எடுத்தும் பொங்கல் வைத்தும்,கிடாய் வெட்டியும் நேற்றிக் கடன் செலுத்தி வழிபட்டனர். விழாவில் தேர்தலின்போது பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியத்தை வதியுறுத்தும் வகையில்,ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ காளியம்மன்,பகவதியம்மன், முத்தாலம்மன் மூவரும் பேரூராட்சிகுட்பட்ட தங்கள் கிராமத்தில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவது போலவும்,ஊரின் வளர்ச்சிக்காக வீடுகள் தோறும் இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்படும், அனைத்து தெருக்கலும் CCTV-கேமரா பொறுத்தப்படும்,ஊரின் கண்மாயை சீர்செய்து மழைநீர் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல தேர்தல் வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டும்.
வருடத்திற்கு 365-நாட்கள்,5-வருடத்திற்கு 1825-நாட்கள் அதனை வீணடித்து விடாதீர்கள் கண்டிப்பாக வாக்களியுங்கள் என வழியுறுத்தியும்,தேர்தலில் தங்களது சின்னமாக பொங்கல் பானை,திரிசூழம், எழும்பிச்சம்பழம் உள்ளிட்ட படங்களுடன் நூதன முறையில் பேனர் வைத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த விழாவிற்கு திண்டுக்கல், மதுரை,கோவை,நெல்லை,திருச்சி, தஞ்சை,புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















