ஓபிஎஸ் இன் கருத்திற்கு செங்கோட்டையன் வலு சேர்க்கும் விதமாக அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல் எழுப்பி வருவதால் அதனை வரவேற்கும் விதமாகவும், ஆதரவு தெரிவிக்கும் விதமாக செங்கோட்டையனை சந்திக்க செல்வதாக ஓபிஎஸ் நிர்வாகிகள் பேட்டியளித்தனர்.

Continues below advertisement

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் பிரிந்து மற்றும் நீக்கம் செய்யப்பட்ட தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறிய கருத்து அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தொடர்ந்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், இன்று ஓபிஎஸ் அணி தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் 150 க்கு மேற்பட்ட நிர்வாகிகள் காரில் செங்கோட்டையனை சந்திக்க புறப்பட்டு சென்றனர் .

Continues below advertisement

கட்சி அலுவலகத்தை ஓபிஎஸ் அணியினர் உடைத்தது குறித்து சையது கானிடம் கேட்டபோது, ஆஇஅதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் நிலையில் கொடநாட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் நடைபெற்ற நிலையில் அதில் யார் பெயர் வந்தது என்று அனைவருக்கும் தெரியும் எனவும், அதிமுக கட்சியின் முன்னாள் தலைவர், தலைவி இருக்கும் பொழுது இதே போன்று பல  பிரச்சினைகள் வந்த நிலையில் சுமுகமாக முடிவெடுத்ததாகவும், தற்போது தலைமையில் உள்ள இபிஎஸ்க்கு தலைமை பண்பு கிடையாது என தெரிவித்தார். மேலும் கட்சி தலைமையகத்தை முதலில் குண்டர்களை கொண்டு தாக்கியது எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும், கூறிய சையது கான்ன் ஓபிஎஸ் இடம் அனுமதி பெற்று செல்கிறீர்களா என்ற செய்தியாளர் கேட்டபோது அவரிடம் அனுமதி வாங்க அவசியம் இல்லை என்றும், தாங்கள் உண்மையான அதிமுகவினர் என்றும் அதன் காரணமாகவே செங்கோட்டையனை சந்திக்க செல்வதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் இன்று ஓபிஎஸ், இபிஎஸ் கைகோர்த்து நின்றபடி வைக்கப்பட்ட விளம்பரபதாகையால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ்ன் சொந்த ஊரான பெரியகுளம் மூன்றாந்தல் காந்தி சிலை அருகில்  அதிமுக இணைப்பு வேண்டி  ஒன்றிணைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விளம்பர பதாகை வைத்துள்ளதால் பெரியகுளம் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த பதாகையில் ஒருபுறம் அறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா, மற்றும் நடுவில் கைகுலுக்கியபடி முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மற்றொருபுறம் சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஆகியோர்களது படங்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. மேலும் பதாகையில் தமிழகத்தை காப்போம்! கழகத்தை ஒன்றிணைப்போம்! பிரிந்துள்ள தொண்டர்களை தலைவர்களே ஒன்று சேருங்கள்!  2026 ல் வென்றிடுவோம்.. எனும் வாசகம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.