மதுரை ரயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 80.67 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பயணிகள் வருமானம் ரூபாய் 280.80 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 78% அதிகரித்து ரூபாய் 502.05 கோடியாக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரூபாய் 191.44 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வருமானம் 27% அதிகரித்து இந்த ஆண்டில் ரூபாய் 242.60 கோடியாக உயர்ந்துள்ளது. மதுரை கோட்டத்தில் ரயில்களில் கடந்த ஆண்டில் 9.2 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இந்த ஆண்டு பயணிகள் எண்ணிக்கை 24.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூபாய் 654.41 லட்சம் வசூலிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பயணச்சீட்டு இல்லாத, பயணிகள் ரயில்களில் வர்த்தக பயன்பாட்டு சரக்குகள் கொண்டு சென்ற, ரயிலில் புகை பிடித்த, ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்திய பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூபாய் 834.12 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில்களில் 21,358 டன் சரக்குகளும், சரக்கு ரயில்களில் 2.20 மில்லியன் டன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளன.
இதைப்படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 26 வரை பக்தர்கள் மூலவர் தரிசனம் செய்ய அனுமதி இல்லை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்