பழனி தண்டாயுதபாணி மடத்திற்கு சொந்தமான , கோவில் கட்டுப்பாட்டில் இருந்த மடத்திற்கு சொந்தமான நிலம் – சட்டவிரோத பத்திரப்பதிவு விவகாரம் குறித்து பழனி பத்திரபதிவு அலுவலகத்தில் ஏஐஜி தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் இருந்த தண்டாயுதபாணி மடத்து நிலம் தொடர்பான 1 ஏக்கர் 40 செனட் அளவிலான 100 கோடி மதிப்பிலான சட்டவிரோத பத்திரப்பதிவு விவகாரம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டவிடரோத பத்திர பதிவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறபித்தது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் ,மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட் செய்யபட்டனர்.
இது குறித்து அடிவாரம் காவல் நிலையத்தில் நிலத்தை விற்ற முருகதாஸ் ,நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை சேதுபதி ,ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டது. மேலும் இந்த விவகாரத்தை சிபிசிஐடி போலிசாருக்கு மாற்ற பட்டு , எஸ்.பி ஷாஜிதா ,டிஎஸ் பி அஜய் தங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையை துவங்கி , நிலத்தை விற்ற முருகதாஸ் வெள்ளத்துரை , சேதுபதி , நிலப்பிரசனையில் சம்பந்தபட்ட அன்வர்தீன் உள்ளிட்ட நான்கு பேரையும் சிபிசிஐடி போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இது குறித்து பத்திரப்பதிவுத்துறை சார்பில் குழு ஒன்று அமைக்கபட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இன்று பழனி பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்த பத்திரப்பதிவுத்துறையின் உதவி பதிவுத்துறை தலைவர் (ஏஐஜி) சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள், பத்திரப்பதிவு பதிவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பழனியில் பேசுபொருளாக உள்ள நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நில விவகாரம் மற்றும் அதே நாளில் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த பத்திரப்பதிவுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த பதிவுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கங்கள் பெறப்பட்டு வருவதுடன், பத்திரப்பதிவின் சட்டப்பூர்வ தன்மை மற்றும் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.