கரூரில் மனு அளித்தாள் உரிமைத்தொகை வழங்கப்படும் என சமூக வலைதளங்கள் வைரலானது தொடர்ந்து மனு அளிக்க வந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களால் பரபரப்பு-ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பெண்கள்.


 




 


சொந்த வீடு மற்றும் பணம் வைத்தவர்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாக மனு அளிக்க வந்த பெண் பேட்டி. 


கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம்தோறும் பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 


 




இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் பலருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .இந்த நிலையில் மகளிர் உரிமைத்துறை வராதவர்கள் மற்றும் புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், ஆயிரம் ரூபாய் பெறுவதற்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு கரூரில்  சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியதை அடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க 50க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். 


 





மகளிர் உரிமைத்தொகை குறித்து பொதுமக்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தற்போது பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை ஈடுபட்டு மனுக்களை பெற்று மாவட்ட ஆட்சியிடம் ஒப்படைத்தனர். 


 


 




இதுகுறித்து மனு அளிக்க வந்த பெண்கள் கூறுகையில்- வீடு கார் மற்றும் பணக்காரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் வாடகை வீட்டில் இருக்கும் எங்களுக்கு இதுவரை உரிமை தொகை வழங்கவில்லை எனவும் பலமுறை இதுகுறித்து மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், மனு அளித்தார் உரிமைத்தொகை வழங்கப்படும் என ஒரு தகவல் வெளியானதை தொடர்ந்து நாங்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த போது


 




 


இது தவறான தகவல் என்று கூறுகிறார்கள் ஆனால் இதுவரை எங்களுக்கு உரிமை தொகை வழங்கவில்லை ஆனால் பணம் வைத்திருக்கும் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.