கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஓன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரபு சங்கர் பார்வையிட்டார்.




கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பாலாராஜபுரம் ஊராட்சி, சின்னம்மநாயக்கன்ப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.70 இலட்சம் மதிப்பிலான புதிய இரண்டு வகுப்பறை கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதையும், அதேப்பள்ளியில் சத்துணவுத்திட்டத்தில் சமைக்கப்பட்ட உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  மேலும், பாலாராஜபுரம், நத்தமேடு பகுதியில் பாரதப் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்  ரூ.1..70 இலட்சம் மதிப்பிலான தனி நபருக்கு வீடு கட்டும் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதையும், தொடர்ந்து மாயனூர் அரசு தொடக்கப்பள்ளியில் 15-வது நிதி குழுத் திட்டத்தின் கீழ் ரூ.7.51 இலட்சம் மதிப்பிலான பள்ளி வகுப்பறைகள் கட்டடங்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், அதேப்பகுதியில் மாயனூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.59.46 இலட்சம் மதிப்பிலான  3 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு அப்பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.
 




 


 


 


இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணிஈஸ்வரி, உதவி பொறியாளர் இளஞ்சேரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பாலாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ,மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial