Continues below advertisement

காஞ்சிபுரத்தில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனம் மீது  மோதிய பேருந்து

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ஒட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அஸ்வின்.‌ பிரதீப் மற்றும் அஸ்வின் இருவரும் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்தில் இருந்து, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத்தில் நோக்கி சென்ற அரசு பேருந்து, அதிவேகமாக இயக்கி சென்று கொண்டிருந்த, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் இளைஞர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் அஸ்வின் மற்றும் பிரதீப் விபத்தில் சிக்கினார்.

Continues below advertisement

இருவர் உயிரிழந்த சோகம்

இந்த விபத்தில் பிரதீப் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அஸ்வின் பலியானார், இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேர் உடலையும் குறைந்த பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் சரமாரி புகார்

அரசு பேருந்து மோதி இரண்டு இளைஞர்கள் பலியான நிலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி செல்லக்கூடிய அரசு பேருந்துகள் அதி வேகமாக இயக்குவதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடனே இந்த சாலையில் பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் பேருந்துகள் வேகமாக செல்வதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் வேகமாக செல்லாத வகையில் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.