ஆஃபர்களை அள்ளி வீசும் தனிஷ்க்! காஞ்சி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! மிஸ் பண்ணிடாதீங்க!
காஞ்சிபுரம் தனிஷ்க் தங்க கடையில், பண்டிகைக்கால புதிய சலுகைகளுடன், தங்க பரிமாற்ற திட்டத்தை நீடித்துள்ளதாக தனிஷ்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Kanchipuram News: "பண்டிகைக்கால புதிய சலுகைகளுடன், தங்க பரிமாற்ற திட்டத்தை நீடித்துள்ளதாக தனிஷ்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்க பரிமாற்றத் திட்டத்தில் சுமார் 1.7லட்சம் கிலோ தங்கம் மறு சுழற்சி செய்யப்பட்டுள்ளதாக தகவல்"
தங்கத்தை பரிமாற்றம் செய்யும் திட்டம்
டாடா குழுமத்தின் நம்பகமான நகை பிராண்டான தனிஷ்க், பண்டிகைக்காலத்தை முன்னிட்டு ‘தங்கத்தை பரிமாற்றம் செய்யும் திட்டத்தை’ மேலும் நீட்டித்துள்ளது. இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பயன் அளிக்கும் வகையில் இரண்டு புதிய சலுகைகளையும் அறிமுகம் செய்துள்ளதாக காஞ்சிபுரம் தனிஷ்க் கிளையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், காஞ்சிபுரம் மண்டல வணிக மேலாளர் இக்னேஷியஸ் இதனை தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், முன்கூட்டிய தங்க முன்பதிவுக்கு சிறந்த தங்க விலை (BGR) மற்றும் பழைய தங்கத்தை மாற்றி வைர நகைகள் பெறும் வசதி ஆகிய இரண்டு புதிய சலுகைகளுடன் பண்டிகைக்கால தங்க பரிமாற்ற திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், முன்கூட்டியே தங்க நகைகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தங்க விலை உறுதி செய்யப்படுவதுடன், பில் போடும் நேரத்தில் முன்பதிவு செய்த விலை அல்லது அன்றைய சந்தை விலை ஆகியவற்றில் குறைவான விலையே வசூலிக்கப்படும் என்றார். இந்த சலுகை ஜனவரி 24 முதல் பிப்ரவரி 25 வரை செல்லுபடியாகும் என்றும் அவர் கூறினார்.
1.7 லட்சம் கிலோ தங்கம் மறுசுழற்சி
மேலும், பழைய தங்கத்தை மாற்றி புதிய வைர நகைகளை பெறும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து, புதிய நகைகளாக மாற்றிக் கொள்ள இந்த திட்டம் உதவுகிறது என்றும், இந்தியா முழுவதும் இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தங்க பரிமாற்ற திட்டத்தில் பங்கேற்று, சுமார் 1.7 லட்சம் கிலோ தங்கம் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த திட்டம் தங்க இறக்குமதியை குறைப்பதற்கு உதவும் எனவும் அவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது நிறுவனர் & பங்குதாரர் C.சிவகுமார், நிர்வாகப் பங்குதாரர் சித்ரா சிவகுமார், காஞ்சிபுரம் தனிஷ்க் தலைவர் R.அரசு உடனிருந்தார்.























