Sriperumbudur Power Shutdown: ஸ்ரீபெரும்புதூரில் நாளை எந்தெந்த ஏரியாவில் மின் தடை தெரியுமா?

Sriperumbudur Power Shutdown: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நாளை மின்தடை நடைபெற உள்ளது.

Continues below advertisement

பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவம் மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். வழக்கமாக இது போன்ற மின்தடைகள் ஏற்படுவதற்கு முன்பு இது குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுப்பதும், வழக்கமாக இருந்து வருகிறது.

Continues below advertisement

மின்தடை - Kanchipuram Power Shutdown 

மின்தடை மேற்கொள்ளும்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட முன்னதாகவும் பணிகள் முடிக்கப்பட்டு மின்சாரம் தரப்படும். அந்த வகையில் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

திருப்பெரும்புதூர் கோட்டம், சிப்காட் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிப்பு.

திருப்பெரும்புதூர் கோட்டம், சிப்காட் மாம்பாக்கம் 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 19.11.2024 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை சுங்குவார்சத்திரம், சேந்தமங்கலம், சந்தவேலூர், பாப்பான்குழி, இராமானூஜபுரம், கீரநல்லூர், குண்ணம், சிறுமாங்காடு, அயீமச்சேரி, ஆரனேரி, சிவன்கூடல், திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, காந்தூர், திருப்பந்தியூர், புதுப்பட்டு, பண்ணுர், கண்ணுர் குன்னவாக்கம், ஏலக்காமங்கலம், பன்ருட்டி, பன்ருட்டி கண்டிகை, வெண்பாக்கம் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் கோட்டம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement