மேலும் அறிய

காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்கள் கண்ணீர்: ஜரிகை தட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவலம்!

Kanchipuram: "வாடகை கூட கட்ட முடியவில்லை என காஞ்சிபுரத்தில் ஜரிகை கிடைக்காததால் கண்ணீருடன் பட்டு நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்"

காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஜரிகை வழங்கக்கோரி நெசவாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டு நகரம் காஞ்சிபுரம் 

உலகப்புகழ் பெற்ற பட்டு நகரமான காஞ்சிபுரத்தில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருவதன் எதிரொலியாக, பட்டு நெசவுத் தொழில் கடும் முடக்கத்தைச் சந்தித்துள்ளது. காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவைகளின் ஆன்மாவாகக் கருதப்படும் 'தங்கச் சரிகை' தட்டுப்பாடு காரணமாக, இன்று பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் நகரம் மற்றும் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், லட்சக்கணக்கான குடும்பங்கள் கைத்தறி நெசவுத் தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளில் அசல் வெள்ளி இழையில் தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகைகள் பயன்படுத்தப்படுவது தனிச்சிறப்பாகும்.

ஜரிகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு 

ஆனால், கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சந்தையில் உச்சத்தைத் தொட்டுள்ளதால், ஜரிகை கொள்முதல் செய்வதில் கூட்டுறவு சங்கங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஜரிகை கொள்முதல் செய்யப்படாததால், கடந்த மூன்று மாதங்களாக 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு நெசவு செய்யத் தேவையான ஜரிகை வழங்கப்படவில்லை. ஜரிகை பற்றாக்குறையினால் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

அதிகாரிகளை முற்றுகையிட்டனர்

இதனால் ஒவ்வொரு நெசவுத் தொழிலாளர் குடும்பத்திற்கும் மாதம் சுமார் 20,000 ரூபாய் வீதம், கடந்த மூன்று மாதங்களில் 60,000 ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமலும், வீட்டு வாடகை கூட செலுத்த முடியாமலும் தவித்து வரும் 300-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், இன்று சங்க அலுவலகத்திற்குள் அதிரடியாகப் புகுந்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் முறையான பதில் அளிக்காததால், நெசவாளர்கள் சங்க வளாகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "பட்டு நகரத்தின் பெருமையைத் தாங்கிப் பிடிக்கும் எங்களுக்கு, ஜரிகை கிடைக்காததால் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது" என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்கம் விலை உயர்வைச் சமாளிக்க அரசு உரிய மானியம் வழங்கி, ஜரிகை தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மாணவன் ஜெய்விக்: பாக்ஸிங் போட்டியில் வெள்ளி வென்று சாதனை! ஒலிம்பிக்கில் தங்க கனவு!
காஞ்சிபுரம் மாணவன் ஜெய்விக்: பாக்ஸிங் போட்டியில் வெள்ளி வென்று சாதனை! ஒலிம்பிக்கில் தங்க கனவு!
காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!
காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!
ராஜ்ய சபா சீட்: தேமுதிக-வை விட விசிக, மதிமுக கட்சிகள் குறைவா? கடம்பூர் ராஜூவின் பரபரப்பு கேள்வி!
ராஜ்ய சபா சீட்: தேமுதிக-வை விட விசிக, மதிமுக கட்சிகள் குறைவா? கடம்பூர் ராஜூவின் பரபரப்பு கேள்வி!
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: காஞ்சிபுரம் மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பெற்றோர்களே, இதை தவறவிடாதீர்கள்!
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: காஞ்சிபுரம் மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பெற்றோர்களே, இதை தவறவிடாதீர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Embed widget