தாசில்தார் (வட்டாட்சியர்) என்பவர் ஒரு வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார். தமிழகத்தில் வருவாய்த் துறையின் மிக முக்கியமான அதிகாரிகளில், தாசில்தார் என்பவர் மிக முக்கியமானவர். நில வருவாய் நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, நிலம் எடுப்பு விவகாரம், பேரிடர் மேலாண்மை, சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகிய பல முக்கியப் பணிகளுக்கு தாசில்தார்.
ஒரு மாவட்ட நிர்வாகத்திற்கு தாசில்தார்கள் பதவி என்பது, இன்றியமையாததாக இருந்து வருகிறது. தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டால் அது மாவட்ட அளவில் மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் ஏழு தாசினார்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் தாசில்தார்கள் மாற்றம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில், நில எடுப்பு பிரிவில் பணி பிரிவு பணியாற்றி வந்த 6 தாசில்தார்கள் உட்பட 7 பேரை பணியிட மாற்றம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மாற்றப்பட்டவர்கள் யார் யார் ?
பரந்தூர் விமான நிலையம் திட்டத்தில் பணியாற்றி வந்த ஸ்ரீதர், பணி மாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் எச்சூர் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் பணிபுரிந்து, வந்த இந்திராணி எச்சூர் ஸ்ரீபெரும்புதூர் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்
பரந்தூர் விமான நிலைய திட்டத்தில், பணியில் பணிபுரிந்து வந்த புவனேஸ்வரன், இருங்காடுகோட்டை சிப்காட் விரிவாக்கம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருங்காடுகோட்டை சிப்காட் விரிவாக்கம் பணியில் பணியாற்றி வந்த, வாசுதேவன் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் அலகு மூன்றில் பணிபுரிந்து, வந்த பாலாஜி பரந்தூர் விமான நிலைய திட்டம் அலகு 7க்கு மாற்றப்பட்டுள்ளார்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் அலகு இரண்டில் பணிபுரிந்து, வந்த லோகநாதன் பரந்தூர் விமான நிலைய திட்டம் அல்லது நாளிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் மண்டலம் இரண்டு அலகு நாளில் பணிபுரிந்து, வந்த மலர்விழி பரந்தூர் விமான நிலைய திட்டம் மண்டலம் -1 அலகு-4 க்கு மாற்றப்பட்டுள்ளார்.