நாளை (02.12.2025) கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை - Heavy Rain Red Alert
சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் 20 செமீ மேல் மழை பதிவாகும் அபாயம் உள்ளதால் வானிலை மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் இன்று இரவு 7 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, தேனி, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களிலும் இரவு வரை மழைக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்திற்கு விடுமுறை - Kanchipuram School Leave Tommorow
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு மழை மற்றும் தூறல் பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர். குறிப்பாக காலை நேரத்தில் மழை பெய்தால் பள்ளிக்கு செல்ல குழந்தைகள் பெரிதும் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை (02-12-2025) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.