மேலும் அறிய

கீழே கிடந்த தாலி: ஊழியர் பாரதி செய்த 'அந்த' காரியம் - ஸ்தம்பித்துப் போன காஞ்சிபுரம்!

"காஞ்சிபுரத்தில் கீழே இருந்த தங்கத் தாலியை, மீட்டுக் கொடுத்த ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன."

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கீழே தவறவிட்ட தங்கத்தாலியை நேர்மையுடன் கண்டெடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஊழியருக்கும், அதன் உரிமையாளரை விரைந்து கண்டுபிடித்து ஒப்படைத்த பெண் காவலருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மருத்துவமனையில் பரபரப்பு

காஞ்சிபுரம் ஒளி முகமது பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் நேற்று (11.02.2026) உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த தங்கத்தாலி அறுந்து கீழே விழுந்துள்ளது. தாலி காணாமல் போனதை அறிந்த பிரியா, மிகுந்த அதிர்ச்சியடைந்து அதனைத் தேடி வந்துள்ளார்.

ஊழியரின் நேர்மை

அதே சமயம், காஞ்சிபுரம் ரயில்வே ரோடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவரும், அரசு மருத்துவமனை ஊழியருமான பாரதி (தந்தை பெயர் ஆதி) என்பவர் மருத்துவமனை வளாகத்தில் அந்தத் தங்கத்தாலி கிடப்பதைக் கண்டுள்ளார். அதனைத் தனது சுய லாபத்திற்காகப் பயன்படுத்தாமல், உடனடியாக அங்கிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைக்க முன்வந்தார்.

உரிமையாளரிடம் ஒப்படைப்பு

பாரதி கண்டெடுத்த அந்தத் தங்க நகையை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அயல் பணியாகப் பணிபுரிந்து வரும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் தலைமை காவலர் முருகேஸ்வரிடம் ஒப்படைத்தார். புகார் ஏதும் வரவில்லை என்றாலும், நகையின் உரிமையாளரைத் தேடும் பணியில் தலைமை காவலர் முருகேஸ்வரி துரிதமாக ஈடுபட்டார். முறையான விசாரணையின் அடிப்படையில், அந்தத் தாலி பிரியாவுக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்த காவல்துறையினர், அவரை வரவழைத்து நகையை ஒப்படைத்தனர்.

ஆய்வாளர் பாராட்டு மற்றும் வெகுமதி

காணாமல் போன நகையை நேர்மையுடன் ஒப்படைத்த மருத்துவமனை பாரதி மற்றும் உரிய நேரத்தில் செயல்பட்டு நகையை உரிமையாளரிடம் சேர்த்த பெண் தலைமை காவலர் முருகேஸ்வரி ஆகிய இருவரின் பணியைப் பாராட்டும் விதமாக, விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதிகளை வழங்கி கௌரவித்தார். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீதான நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.

தொடரும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் 

தமிழ்நாடு முழுவதும் சமீபமும் காலமாக தங்கம் விலை உயர்ந்தாலும், தற்செயலாக தங்களுக்கு கிடைக்கும் நகைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலையை விட இவர்களின் நேர்மை விலை அதிகம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!
காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!
ராஜ்ய சபா சீட்: தேமுதிக-வை விட விசிக, மதிமுக கட்சிகள் குறைவா? கடம்பூர் ராஜூவின் பரபரப்பு கேள்வி!
ராஜ்ய சபா சீட்: தேமுதிக-வை விட விசிக, மதிமுக கட்சிகள் குறைவா? கடம்பூர் ராஜூவின் பரபரப்பு கேள்வி!
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: காஞ்சிபுரம் மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பெற்றோர்களே, இதை தவறவிடாதீர்கள்!
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: காஞ்சிபுரம் மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பெற்றோர்களே, இதை தவறவிடாதீர்கள்!
காஞ்சிபுரத்தில் பயனாளிகளுக்கு ரூ.18.70 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் பயனாளிகளுக்கு ரூ.18.70 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
EPS in Edappadi constituency : எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
Embed widget