Kanchipuram Varadaraja Perumal Temple: "காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உச்ச நீதிமன்றம் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை மத்தியஸ்தராக நியமித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது"
கோயில் நகரம் காஞ்சிபுரம்
கோயில் நகரமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரத்தில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. காஞ்சிபுரத்தில் மிக முக்கிய கோவில்களில் ஒன்றாக, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் இருந்து வருகிறது. வைணவ கோயில்களில் ஸ்ரீரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய கோயிலுக்கு அடுத்த இடத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வடகலை Vs தென்கலை பிரச்சினை - Vadakalai Vs Thenkalai
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பல ஆண்டுகளாக வடகலை மற்றும் தென்கலை ஆகிய இரண்டு பிரிவுகளுக்கிடையே பிரச்சனை இருந்து வருகிறது. தொடர்ந்து இந்த கோயிலில் பிரபந்தம் பாடுவதில் பிரச்சனை ஏற்பட்டு வருவது, கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக இரண்டு பிரிவினரும் மாறி மாறி நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றனர்.
அந்த வகையில் தென்கலை பிரிவு சார்பில் தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சௌந்தர் அடங்கிய அமர்வு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட தென்கலை பிரிவினருக்கு என்று, தனிப்பட்ட உரிமை வழங்கிய 1915 மற்றும் 1963 ஆகிய ஆண்டுகளில் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டியது. மேலும் வடகலை பிரிவினரையும் பிரபந்தம் பாட அனுமதித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து இருந்தது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான வாதங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டறிந்தார்.
நடுவர் நியமனம்
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பிரம்மந்தம் பாடுவதில் எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண, இருதரப்புக்கும் இடையே உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை நடுவராக நியமிக்கிறோம் என அறிவித்தது. மேலும் அந்த உத்தரவில், நீதிபதியை ஞகவுல் தனக்கு உதவியாக தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களை சேர்த்துக் கொள்ளலாம். இதுபோக கோயில் சடங்கு மற்றும் வரலாறுகளை நன்கு அறிந்தவர்கள் இருவரை தனது குழுவில் சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மந்தம் பாடும் பிரச்சனை ராமானுஜரின் சீடர்களுக்கு இடையே மத முதலாக மாறிவிடக்கூடாது. பகைமையை விட சகோதரத்துவமே முக்கியம் மத்தியஸ்தம் முடியும் வரை, தற்போதைய நிலையை தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்குள் போலீசாரை அனுமதிக்க கூடாது, போலீசாரின் தலையீடு ஏற்றத்தக்கது அல்ல, அமைதியை காப்பதற்கு பதில் அது நிலைமையை மோசமாகிவிடும்.
மத்திய அஸ்தம் நடக்கும் போது எந்த பிரிவினரும் சட்ட ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தாத வகையில் செயல்பட வேண்டும். சட்ட ஒழுங்குச் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது. சமரசம் ஏற்பட்டாலோ, மாநில அரசின் தலையிட அவசியம் என்றாலும், இந்த விவரத்தை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு இரு தரப்பினரும் கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்
