அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷகீனாபேகம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில், தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். ஷகீனாபேகம் ஒரகடம் அருகே உள்ள விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஷகீனாபேகம் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த, சுமன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவரும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.


ஏமாற்றிய காதலன்


இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, ஷகீனா பேகத்துடன் நெருக்கமாக இருந்தார் சுமன். இருவரின் நெருக்கம் காரணமாக காதலின் மிகுதியால், ஷகீனாபேகம் கர்ப்பம் ஆகியுள்ளார். சுமன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ஷகீனாபேகம் பலமுறை வற்புறுத்தியும், திருமணம் செய்யாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.


சமீப காலமாக சுமன் ஷகீனாபேகமுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். அதன் பிறகு அவர் எங்கு இருக்கிறார் என தேடியும் சுமன் கிடைக்காமலும் இருந்து வந்துள்ளார். அசாமிற்கு சென்று தேடிப் பார்த்தும் சுமன் கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். விடுதியில் தங்கியிருந்து கம்பெனியில் வேலைக்கு சென்று வந்துள்ளார். 


திடீர் பிரசவ வலி


இதற்கிடையில் கர்ப்பம் குறித்து விடுதியில் உள்ளவர்கள் கேட்டபோதெல்லாம், ஷகீனாபேகம் சமாளித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விடுதியில் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 


இதனைத் தொடர்ந்து குழந்தை பிறந்துள்ளது அதனை யாருக்கும் தெரியாமல், சிசுவை குளத்தில் வீசியது தெரியவந்துள்ளது. சஹானா பேகம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரசவத்தின் போது, சிசு இறந்ததா.? அல்லது சிசுவை கொலை செய்து குளத்தில் வீசப்பட்டத..? என்பது குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


போலீஸ் தீவிர விசாரணை


குழந்தை உடலை மீட்ட போலீசார் பின்னர், ஷகீனா பேகத்திடம் புகாரை பெற்று அவரது விருப்பப்படி இஸ்லாமிய முறைப்படி செங்கல்பட்டு நவாப் ஜாமியா பள்ளிவாசலில் அடக்கம் செய்தனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்