காஞ்சிபுரம்: கனமழை எச்சரிக்கை! புகார் அளிக்க அவசர உதவி எண்கள் அறிவிப்பு! Save பண்ணி வச்சுக்கோங்க!
Kanchipuram Rain Complaint Number: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தொடர்பான புகார் தெரிவிக்க அலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க 044- 27237107 மற்றும் 805621077 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வடகிழக்கு பருவமழை - Kanchipuram Monsoon rain
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து எச்சரித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவமழை தாக்கம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆறு மணி நேரத்தில் வாலாஜாபாத் 3.6 செ.மீ, ஸ்ரீபெரும்புதூரில் 3.4 செ.மீ, குன்றத்தூரில் 13 மில்லி மீட்ரும், செம்பரம்பாக்கத்தில் 23 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரத்தில் நிரம்பும் ஏரிகள்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம், மணிமங்கலம் ஏரிகள் நீர் நிரம்பும் நிலையில் உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடியில், 21.20 அடியை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3.6 டிஎம்சி நீர் தேக்கி வைக்க முடியும். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் 2.6 டிஎம்சி ஆக இருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 296 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கத்தில் இருந்து 195 கன அடி (குடிநீர் தேவைக்காக 165 மற்றும் இதர தேவைக்காக மீதி கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது) நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 22.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 14 ஏரிகள் முழுமையாகவும் , 56 ஏரிகள் 90 சதவீதத்தையும், 224 ஏரிகள் 75 சதவீதத்தை தாண்டி நீர் நிரம்பியுள்ளது.
தொலைபேசி எண் அறிவிப்பு - Kanchipuram Disaster Management Complaint number
மேலும் பேரிடர் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் பேரிடர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க 044 - 27237107 மற்றும் 805621077 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார். மாவட்டத்தின் முக்கிய விவசாய ஏரிகள் நீர் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





















